ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்களுக்கு காபி எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டதற்கு ஒருவர் தான் ஒருநாளைக்கு 25 முதல் 30 காபி குடிப்பதாகவும் இதை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செய்து வருவதாகவும் கூறினார். இதைக் கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் நேயர்களும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
காலையில் எழுந்ததும் நல்ல ஸ்ட்ராங்கான காபி சாப்பிடாவிட்டால் அன்றைய பொழுதே போகாது என்கிறார் ஒருவர். சாதாரண இன்ஸ்டன்ட் காபில்லாம் ஆகாது. நல்ல கும்பகோணம் டிகிரி காபிதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் ஒருவர். இப்படி காபி மீது பைத்தியமாக எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் வரிசையில் மும்பையை சேர்ந்த மிஷ்குவாத் என்பவர் ரூ.9.4 லட்சத்தை காபிக்காக செலவிட்டிருக்கிறார். ஸ்டார்பக்ஸ் - சோமேட்டோ இணைந்து வெளியிட்டுள்ள புதிய விளம்பரப் படத்தில் மிஷ்குவாத் என்பவர் ஸ்டார்பக்ஸ் கடையில் இருந்து ரூ.9.4 லட்சத்துக்கு சோமாட்டோ மூலம் ஆர்டர் செய்து காபி குடித்திருக்கிறார்.
ஒவ்வொரு உணவு டெலிவரி ஆப்பும் தங்களது சாதனையை கொண்டாடுவதற்கு பல்வேறு வழிகளை வைத்துள்ளன. அந்தவகையில் மிஷ்குவாத் ஸ்டார்பக்ஸ் மீது கொண்டுள்ள காதலை சோமாட்டோ கொண்டாடி வருகிறது. அதன் விளம்பரப் படத்தில் மிஷ்குவாத்தின் தாயார் கோபத்துடன் லோக்கல் ஸ்டார்பக்ஸ் கடைக்கு வருகிறார்.
அங்கிருக்கும் சேல்ஸ்மேனிடம் தனது பணத்தை முழுவதும் திரும்பத் தரும்படி கேட்டு சண்டை போடுகிறார். அப்போது அங்கு வந்த கடை மேனேஜர் அவரை சமாதானப்படுத்தி மிஷ்குவாத் ஸ்பெஷல் காபியைக் குடிக்குமாறு தருகிறார். அதைக் கேட்டு தனது மகளின் பெயரில் பிரபலமான கடையில் ஸ்பெஷல் காபியா என்று மிஷ்குவாத்தின் அம்மா ஆச்சரியமடைந்து விடுகிறார்.
இப்படி மிஷ்குவாத்துக்கும் ஸ்டார்பக்ஸுக்கும் உள்ள பிணைப்பை சோமாட்டோ மூலம் வெளிப்படுத்துவதாக விளம்பரத்தில் இடம் பெறும். மிஷ்குவாத்தின் வீட்டுக்கு அடிக்கடி காபி டெலிவரி செய்யும் காட்சி சோமாட்டோவுக்கும் உள்ள பங்கை பிரதிபலிக்கிறது. சோமாட்டோவின் விளம்பரங்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மையமாக வைத்தே தயாரிக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து தனது மார்க்கெட்டிங் உத்திகளை சோமாட்டோ கையாளுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நாட்டு நடப்புக்கு ஏற்றபடி சோமாட்டோ நிறைவேற்றுகிறது.
சோமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது நிறுவனத்தின் முக்கிய திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களின் முடிவுப்படி விடுகிறார். இதனால் வாடிக்கையாளர்களுடன் நிறுவனத்துடனான உறவு வலுப்பெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சோமாட்டோவின் பிரசாரத்தில் 2023 அனுபவங்கள் என்ற பெயரில் உண்மையான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை சோமாட்டோ மூலம் பெற்றது பற்றி பகிர்ந்தனர். இது வாடிக்கையாளர்களை சோமாட்டோ எந்தளழுக்குப் புரிந்து வைத்திருக்கிறது என்பதையும் அவர்களுடனான தனிப்பட்ட நெருக்கத்தையும் எடுத்துக் கூறியது.
சோமாட்டோவின் விளம்பரங்கள் எல்லாம் பாப் கலாசாரத்துடனும் சமூக சிந்தனையுடனும் இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது நிறுவனத்தில் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக வைத்து சோமாட்டோ செயல்படுகிறது. தங்கள் நிறுவனப் பெயரை எப்படியெல்லாம் தவறாக உச்சரிக்கின்றனர் என்பதையும் நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டியுள்ளது. சோமாட்டோ என்பதை சோமைட்டோ அல்லது சோமேட்டா என்று இருவகையாக மக்கள் உச்சரிக்கின்றனர்.
Story Written by: jayachandran


Click it and Unblock the Notifications