அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. $6 பில்லியன் செலவில் சூரிய ஆலைகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் வெற்றி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அதானியின் காட்டில் தற்போது பண மழை பொழிய ஆரம்பித்துள்ளது எனலாம்.

ஏனெனில் கடந்த மே மாத இறுதியில் தான் 1320 மெகாவாட் அளவுள்ள தெர்மல் பவர் பிளான்ட் அமைக்க மத்தியபிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையில் தற்போது ஜாக்பாட் அடித்தாற்போல, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர் செலவில் 8 ஜிகா வாட் கொள்ளளவு கொண்ட சூரிய மின் ஆலைகளை அமைக்க அரசாங்க ஒப்பந்தத்தினை வென்றதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் தெரிவித்துள்ளது.

எப்போது கட்டமைப்பு?
 

எப்போது கட்டமைப்பு?

அதானி குழுமத்தின் ஒரு பகுதியான இந்த நிறுவனம், முதல் 2 ஜிகாவாட் திறன் கொண்ட உற்பத்தி ஆலையை 2022ம் ஆண்டுக்குள்ளும், மீதமுள்ளவை 2025க்குள்ளும் கட்டமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதோடு அதானி குழுமம் 2022ம் ஆண்டில் 2 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின்கல மற்றும் உற்பத்தி திறனை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஸ்டேட் ரன் சோலார் எனர்ஜி கார்ப் ஆப் இந்தியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

மாருதியுடன் ஒப்பிடல்

மாருதியுடன் ஒப்பிடல்

இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவரான கவுதம் அதானி, அவரது முயற்சிகளை இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பாளாரான மாருதி சுசூகியுடன் ஒப்பிட்டுள்ளார். அது உள்ளூர் உற்பத்தியினை அதிகரிப்பது, சோலார் செல்ஸ் மற்றும் சப்ளை பற்றியும் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி

சீனாவில் இருந்து இறக்குமதி

இந்தியா தற்போது 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட சோலார் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏனெனில் உள்நாட்டு உற்பத்தியாளர்களை விட சீனாவின் பொருட்கள் மலிவாக உள்ளதால், இது இந்திய சந்தைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

நாம் சீனாவின் போட்டியாளர்

நாம் சீனாவின் போட்டியாளர்

அடிப்படையில் நாம் சீனாவின் போட்டியாளர்கள். நாம் நமது திறனை மேம்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் சிறிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியாவில் உற்பத்தியினை ஆரம்பித்தார். ஆனால் ஒன்று இன்று நாடு முழுவதும் பல இடங்களில் உள்ளது என்றும் அதானி கூறியுள்ளார்.

பங்கு விலை
 

பங்கு விலை

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கிட்டதட்ட இரு மடங்காக அதிகரித்த அதானி பங்கு விலையானது, கடந்த செவ்வாய்கிழமையன்று 5 சதவீதம் அதிகரித்தது, 312.60 ஆக உயர்ந்தது. தற்போது அதன் விலையானது கிட்டதட்ட 5 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது (1.53 மணியளவில்) 15.60 ரூபாய் அதிகரித்து, 328.35 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aadani green energy to build 8 GW solar projects in india

Adani green energy ltd said it won a govt contract to build solar power plants in india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X