சென்னை: நம் நாட்டில் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி சில மோசடிக்காரர்கள் ஆன்லைனில் லபக்கென மக்களின் பணத்தை பறித்து வீண் தொந்தரவு செய்கின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு ஆதார் கார்டு சட்டம் என்ன சொல்கிறது? எவ்வாறு தண்டனை வழங்கப்படுகிறது.. என்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஆதார் தொடர்புடைய மோசடிகள் அதிகரித்து இருக்கிறது. இதனால் நிதி இழப்புகள், அடையாளத் திருட்டு, சட்டவிரோதமாக உங்கள் விவரங்களை பயன்படுத்துதல் போன்ற முறையற்ற பயன்பாடுகள் நடக்கின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு என்னென்ன தண்டனை வழங்கப்படும் என்பதைப் பார்ப்போம்.

ஆதார் சட்டம் 2016இன் கீழ் ஆதார் தொடர்புடைய கிரிமினல் குற்றங்கள் மற்றும் அதற்கான அபராதங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. முதலாவதாக சிலர் செய்யும் திருட்டு வேலைகளில் ஒன்று தவறான பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் போலியான முகவரியை கொடுத்து ஆதார் பதிய விண்ணப்பிப்பது. இது ஒரு மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இதன் விளைவாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சில நேரங்களில் இவை இரண்டும் சேர்ந்து குற்றவாளிகளுக்கு வழங்கப்படலாம்.
இதனால்தான், உங்களுடைய ஆதார் கார்டை தேவைப்படும் நேரங்களில் மட்டும் அன்லாக் செய்து வைக்கும் படி எச்சரிக்கைகள் விரிக்கப்படுகிறது. தேவையில்லாத நேரங்களில் உங்கள் பயோமெட்ரிக் விபரங்களை லாக் செய்து வைக்கலாம். இதற்கு UIDAI-இன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று, சில சிம்பிள் ஸ்டெப்ஸ்களைப் பயன்படுத்தினாலே போதுமானது.
2. சிலருடைய ஆதார் நம்பரை வைத்து அவர்களுடைய விவரங்களில் மாற்றத்தை செய்வது. இதுபோன்ற குற்றம் செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
3. அங்கீகரிக்கப்பட்ட நபராகவோ அல்லது நிறுவனமாகவோ காட்டிக் கொண்டு உங்களுடைய ஆதார் விவரங்களை பெறுபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம். இது மேலும் ரூ. 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில், உங்களிடம் போலியாக நடித்து உங்கள் ஆதார் விவரங்களைப் பெற்று ஏமாற்றுபவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் சேர்த்து விதிக்கப்படலாம்.
4. ஆதார் பதிவதற்கு பயன்படுத்தும் தகவல்களைப் பிறருக்கு வழங்குவது அல்லது அனுப்புவது ஆதார் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கான தண்டனையாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம். இது ஒரு நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டால் அந்த 10,000 ரூபாய், ரூ. 1 லட்ச ரூபாயாக மாறும் வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் இந்த இரண்டையும் சேர்த்து விதிக்கப்படலாம்.
5. ஹாக்கிங் செய்து CIDRஇன் ஆதார் தகவல்களைப் பெறுவது மிகப்பெரிய குற்றமாகும். இதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமாக ரூ. 10 லட்சமும் விதிக்கப்படலாம்.
ஒரு தனி நபரின் ஆதார் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்பும் நபரோ அல்லது நிறுவனமோ 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் பெறக்கூடும் அல்லது இவை இரண்டும் சேர்த்து பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
இதில் குறிப்பிடப்படாத ஏதேனும் தவறை ஆதார் கார்டை பயன்படுத்தி செய்தால் ரூ. 25,000 ரூபாய் அபராதமும், 3 வருட சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications