மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் கூலித் தொழிலாளிகளுக்கு ஆதார் அடிப்படையில் ஊதியம் வழங்குவதை இந்த ஆகஸ்ட் மாதம் 31க்குப் பிறகு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி இந்தாண்டு ஜனவரியில் ஆதார் அடிப்படையிலான ஊதியம் வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது.
இதனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். ஆரம்பத்தில் ஆதார் அடிப்படையிலான ஊதியம் வழங்கும் முறையை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்த அறிவிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 31ம் தேதிக்கும் ஜூன் 30ஆம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக ஆகஸ்ட் 31 முதல் அமலாகிறது.

இருப்பினும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக அதிகாரிகள் 90 சதவீத தொழிலாளர்களின் அக்கவுன்ட்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டதால் இனி ஒத்தி வைப்புகள் இருக்காது என்று கூறியுள்ளனர்.
ஜூனில் அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் 14.28 கோடி பலன் பெறும் தொழிலாளர்களில் 13.75 கோடி பேர் தங்களது ஆதார் கார்டுகளை வெற்றிகரமாக இணைத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 12.17 கோடி ஆதார் எண்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டன. இதில் ஆதார் அடிப்படையிலான ஊதியம் பெறுவதற்கு 77.81 சதவீதம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
2023 மே மாதத்தின்படி 88 சதவீத ஊதியம் ஆதார் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்குத் தேவையான வேலை ஆவணம் வழங்கப்பட்டுள்ளதால் ஆதார் அடிப்படையிலான ஊதியத்துக்கு தகுதி இல்லையென்று நிராகரித்து விட முடியாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்து மூலமாக நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1.13 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இது தற்போது பணியாற்றும் ஊழியர்கள் ஆதார் அடிப்படையிலான ஊதியத்துக்காக இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் இந்த வேலை மந்தமாக உள்ளது. அஸ்ஸாமில் 42 சதவீதம், அருணாசல பிரதேசத்தில் 23 சதவீதம், மேகாலயாவில் 70 சதவீதம், நாகாலாந்தில் 37 சதவீத தொழிலாளர்கள் இன்னும் ஆதார் இணைப்புக்காக காத்திருக்கின்றனர்.
ஆதார் அடிப்படையிலான ஊதியம் நேரடியாக கணக்கில் வரவு செய்யப்படும். இது 2017இல் இருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுவழியாக செயல்படுத்தப்படுகிறது.
மாநில அதிகாரிகள் இதற்காக சிறப்பு முகாம்களை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தத் திட்டப் பயனாளிகள் 100 சதவீதம் ஆதார் அடிப்படையிலான ஊதியத்தைப் பெறுவதற்கு ஏதுவாகும்.


Click it and Unblock the Notifications