சென்னை: இந்தியாவில் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு பள்ளியில் அட்மிஷன் போடுவதில் தொடங்கி அரசின் நலத்திட்டங்களை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் கேட்கப்படுகிறது.
ஆதார் அட்டை: குழந்தைகளை பொருத்தவரை ஐந்து வயது வரை இருப்பவர்களுக்கு இந்திய அரசாங்கம் பால் ஆதார் அட்டை வழங்குகிறது. 5 வயது ஆன பிறகு இவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது கட்டாயம். இதனை 7 வயதுக்குள் முடிக்க வேண்டும். அதே போல இவர்கள் 15 வயது அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது கட்டாயம்.

ஆதார் அப்டேட்: ஆதார் தகவல்களை அப்டேட் செய்து வைத்திருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்டங்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த சூழலில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் வசதியை ஏற்படுத்தி தருவது தொடர்பான ஒரு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை செயலர் பி சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில அரசு சார்பில் பல்வேறு உதவித்தொகை மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளார்.
அரசாணை வெளியீடு: இந்த உதவி தொகை அனைத்து மாணவர்களுக்கும் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யக் கூடிய வகையில் நேரடி பயனாளர் பரிமாற்றம் மூலம் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை கட்டாயம். ஏற்கனவே இதில் பயன்பெற்று வரும் மாணவர்கள் புதிதாக பயன்பெறக்கூடிய மாணவர்கள் என அனைவரும் தங்களுடைய ஆதார் விவரங்களை அப்டேட் செய்து வைத்துக் கொள்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயோமெட்ரிக் அப்டேட்: பள்ளி கல்வித்துறையில் பயின்று வரும் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சுமார் 15 லட்சம் மாணவர்களுக்கு கட்டாயமாக பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய தபால் துறை பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலக்கூடிய பள்ளியிலேயே முகாம் அமைத்து அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகளிலேயே அப்டேட் செய்யலாம்: இதோடு சேர்த்து ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளையும் மேற்கொள்வது எளிதானது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்திருக்கிறது. எனவே இந்திய அஞ்சல் துறை பள்ளிகளிலேயே பயோமெட்ரிக் புதுப்பித்தல் சேவையும் வழங்குவதற்கு அரசு அனுமதி தந்து அரசாணை வெளியிடுவதாக தெரிவித்திருக்கிறார். இதன்படி அஞ்சல் குறியீடு அடிப்படையில் பள்ளிகள் பட்டியலிடப்பட்டு அஞ்சலக பணியாளர்கள் மூலம் மாணவர்களுக்கான பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் .
அஞ்சல்துறை சார்பில் முகாம்: பள்ளிகளிலேயே வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 கட்டங்களாக பிரத்தியேக முகாம்கள் நடத்தப்படும் என்றும் இதன் மூலம் 15 லட்சம் மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் அப்டேட் செய்யப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications