டெல்லி: இந்திய குடிமக்கள் என்பதற்கான ஆதாரத்தை நிரூபிப்பதற்கு பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் ரேசன் கார்டு உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படாது என டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நபர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டு ஆவணங்களை காட்டினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு வெளிநாட்டவர்களும் இந்தியாவில் நுழைந்து முறைகேடாக ஆதார் கார்டு ,பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு வாங்கி வைத்துக் கொண்டு சட்டத்துக்கு புறமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சூழலில் மத்திய அரசு அனுப்பி உள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக டெல்லி காவல்துறையினர் கூறுகின்றனர். இனி ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஆகிய மூன்றையும் இந்திய குடிமக்கள் என்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
வங்கதேச நாட்டவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்கள் பலரும் இந்திய குடிமக்கள் எனக்கூறி அதற்கு ஆதாரமாக ஆதார் கார்டு ,பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை சமர்ப்பித்துள்ளனர். இதன் காரணமாக உண்மையாகவே இந்திய குடிமக்கள் யார் வெளிநாட்டிலிருந்து வந்து முறைகேடாக தங்கி இருப்பவர்கள் யார் என்பது அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தான் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகிய இரண்டு மட்டுமே அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அவர்களுடைய பகுதிகளில் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் சந்தேகத்து இடமான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளனர். டெல்லியில் தங்கி இருக்கும் பலரது அடையாள ஆவணங்களை பரிசோதித்த போது தான் வெளிநாட்டவர்கள் பலரும் முறைகேடாக தங்கி இருப்பது கண்டறியப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் கூறுகின்றனர்.
டெல்லியில் 3,500 பாகிஸ்தான் குடிமக்கள் வசிப்பதாகும் அவர்களில் 520 பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களில் சுமார் 400 பேர் அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து பாகிஸ்தானை சேர்ந்த மக்கள் இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டது. இந்த சூழலில் தான் டெல்லி காவல்துறை பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மட்டுமே குடிமக்கள் என்பதற்கான ஆவணமாக ஏற்போம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications