டெல்லி: இதுவரை உங்கள் ரேஷன் கார்டினை இன்னும் ஆதார் எண் உடன் இணைக்கவில்லையா? இதோ உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு மற்றும் ஆதாரினை இணைக்கும் பணி தற்போது செம்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக உங்களது ரேஷன் கார்டு செயலிழக்காது எனவும், கொரோனா முழு அடைப்பு காலத்திலும் தங்கள் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி, மக்கள் உணவு தானியங்களை தொடர்ந்து பெறலாம் எனவும் மத்திய நுகர்வோர் அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு ரத்து இல்லை
பொது விநியோக முறை (PDS)-ன் கீழ் பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அதோடு ஆதார் எண் இல்லை எனினும் பயனாளிகளின் பெயர் நீக்கப்படாது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படி ஒரு அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.
பெயர் நீக்கம் கூடாது
மேலும் இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அமைச்சகம் தெளிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது, அதில் எந்தவொரு உண்மையான பயனாளிக்கும் உணவு தானியங்களின் ஒதுக்கீட்டில் இருந்து மறுப்பு தெரிவிக்க கூடாது. அதோடு ஆதார் எண் இல்லை என்ற காரணத்தால் மட்டுமே அவர்களின் பெயர்கள் / குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கப்படக்கூடாது / ரத்து செய்யப்படக்கூடாது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள்
மேலும், பயனாளியின் ஆதார் அங்கீகாரத்தில் தோல்வி, பயனாளியின் மோசமான பயோமெட்ரிக்ஸ், நெட்வொர்க் / இணைப்பு / இணைப்பதில் உள்ள சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப காரணங்களால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மறுக்கப்படாது என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மானிய விலையில் அரிசி
NFSA-ன் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை சுமார் 80 கோடி மக்களுக்கு உயர் மானிய விலையில் வழங்குகிறது. முழு அடைப்பின் போது நிவாரணம் வழங்க, மத்திய அரசு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குகிறது. இது ஜூன் வரை மூன்று மாத காலத்திற்கு நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.
ஆதார் – ரேஷன் இணைப்பு
தற்போது உள்ள 23.5 கோடி குடும்ப அட்டைகளில் கிட்டத்தட்ட 90% ஏற்கனவே ரேஷன் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது குடும்பத்தில் ஒரு உறுப்பினராவது). 80 கோடி பயனாளிகளில் கிட்டத்தட்ட 85% பேர் அந்தந்த ரேஷன் கார்டுகளுடன் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர்.
இணைப்பு அவசியம்
இந்த நிலையில் ஏழை மற்றும் புலம்பெயர்ந்த பயனாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் NFSA ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறனை செயல்படுத்தவும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. ஆகையால், நாட்டில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவர் மற்றும் பயனாளியின் தனித்துவமான பதிவை நிறுவுவதில் ஆதார் எண்களை இணைப்பது முக்கியமானது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகையால் அவரது உரிமை பாதுகாக்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications