இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, பேங்க், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மேலும் கேஒய்சி சரிபார்ப்பிற்கு தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டு தான் முன்னிலையில் இருக்கிறது. எனவே ஆதார் கார்டு இவ்வளவு முக்கியமானதாக இருப்பதால் அதில் உங்களுடைய பெயர், முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் ஆன்லைனில் இந்த விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இதற்கும் வரம்புகள் உண்டு. இந்தப் பதிவில் ஆதார் கார்டில் இரண்டு முறை மட்டுமே மாற்றக்கூடிய விவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
ஆதார் கார்டுகள் UIDAI மூலம் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். மேலும் சில திருத்தங்களை அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று மாற்றியமைக்கலாம். உதாரணமாக உங்களுடைய ஃபோட்டோ, பிறந்த தேதி, பெயர் போன்ற விவரங்களை கண்டிப்பாக அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று தான் மாற்ற வேண்டும்.

ஏனெனில் அடையாளத் திருட்டு தற்போது அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அவர்கள் உங்களை நேரில் பார்த்து உங்களுடைய கருவிழி, கைரேகை போன்ற விவரங்களை வைத்து தான் இந்த மாற்றங்களை செய்வார்கள். ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது பலர் கவனக்குறைவாக சில தவறுகளை செய்து விடுவார்கள். இதனால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இரண்டு முறை மட்டுமே மாற்றக்கூடிய விவரம்: உங்களுடைய பெயரை ஆதார் கார்டில் இரண்டே இரண்டு முறை மட்டும் தான் திருத்த முடியும். சிலர் வெவ்வேறு ஆவணங்களில் வெவ்வேறு பெயரை கொடுத்து விடுவார்கள். உதாரணமாக சிலருக்கு குடும்பப் பெயர் இருக்கும். இந்த குடும்பப் பெயரை ஒரு ஆவணத்தில் சேர்த்திருப்பார்கள். இன்னொரு ஆவணத்தில் விட்டிருப்பார்கள். இதுபோன்ற தவறுகள் ஏற்படும் போது அது ஆதாரிலும் பிழையை ஏற்படுத்தலாம். இது போன்ற நேரங்களில் உங்களுடைய பெயரை ஆதார் கார்டில் இரண்டு முறை மட்டுமே திருத்த முடியும். அதற்கு மேல் பெயரில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது.
உங்கள் ஆதார் கார்டில் ஏதேனும் பிழை இருந்தால் அவற்றை எத்தனை முறை திருத்த முடியும்?:
பெயர்: உங்கள் வாழ்நாள் முழுவதும் இரண்டு முறை ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
பாலினம்: வாழ்நாளில் ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம்.
பிறந்த தேதி: உங்கள் பிறந்த தேதியை ஒருமுறை புதுப்பிக்கலாம்.
முகவரி: பெயர் மற்றும் பிறந்த தேதி போலன்றி, உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியைப் புதுப்பிப்பதற்கு வரம்பு இல்லை. ஏனெனில் சிலர் வாடகை வீடுகளில் வசிப்பார்கள். இதுபோன்ற நபர்கள் வீடு மாறும் போது முகவரியும் மாறக்கூடும் என்பதால் முகவரி மாற்றத்திற்கான வரம்பு எதுவும் இல்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications