நம் நாட்டின் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. ஆதார் கார்டு கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கும் ஒரு ஆவணம் என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு நபரின் அடையாளச் சான்றாக இருப்பதற்காக மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய நோக்கங்களுக்காகவும் பயன்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் இந்த ஆதார் கார்டு ஒரு நபரின் பயோமெட்ரிக் மற்றும் முகவரி விவரங்களை உள்ளடக்கிய ஆவணம்.
தனிநபர்கள் தங்கள் ஆதார் விபரங்களை சில நேரங்களில் திருத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் சிலருடைய பிறந்த தேதியில் பிழை இருக்கலாம், பெயரில் பிழை இருக்கலாம், முகவரியில் மாற்றம் இருக்கலாம். இதனை அப்டேட் செய்து விவரங்களை துல்லியமானதாக வைத்திருப்பது அவசியம். ஏனெனில் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் அனைத்து விவரங்களும் சீரானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் இ-கேஒய்சி செயல்முறை, அரசாங்க மானியங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

உங்கள் ஆதார் கார்டை எவ்வாறு புதுப்பிப்பது?: ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிப்பதற்கு 2 வழிகள் உண்டு. ஒன்று ஆன்லைன் முறை, இன்னொன்று ஆஃப்லைன் முறை. ஆன்லைனில் சில விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பயோமெட்ரிக் தகவல்கள் தேவைப்படும் விவரங்களை கண்டிப்பாக அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று தான் மாற்ற முடியும்.
இப்போது பலருக்கும் எழும் கேள்வி என்னவென்றால்.. ஆதார் கார்டில் விவரங்களை அப்டேட் செய்த பிறகு எவ்வளவு நேரங்கள் கழித்து அவை ஆதார் கார்டில் பிரதிபலிக்கும்? என்பதுதான். உங்கள் ஆதார் கார்டை ஆன்லைனில் புதுப்பிக்க கோரிக்கையை சமர்ப்பித்தவுடன் அந்த மாற்றங்கள் பிரதிபலிக்கும் நேரம் மாறுபடலாம்.
பொதுவாக உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் போன்ற தகவல்களை புதுப்பித்து இருந்தால் மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு ஆதார் கார்டில் பிரதிபலிக்க 30 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் ஆதார் விவரங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு புதிய தகவல்கள் ஆன்லைன் போர்ட்டலில் கிடைக்கும். இ-ஆதாரை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல நீங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்து விட்டீர்கள் என்றால்.. ஆன்லைனில் மட்டுமே இந்த விவரங்கள் இருக்கும். நீங்கள் ஏற்கனவே கையில் அப்டேட் செய்யப்படாத ஆதார் கார்டை வைத்திருப்பீர்கள், அந்த ஆதார் கார்டில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும். எனவே நீங்கள் PVC ஆதார் கார்டு பெற்றுக் கொள்ளலாம். ஆதார் கார்டை புதுப்பிக்கும் போதே இந்த ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கும். ஒருவேளை நீங்கள் PVC ஆதார் கார்டை தேர்ந்தெடுத்திருந்தால் 5 முதல் 15 நாட்களில் ஆதார் கார்டு உங்கள் வீட்டிற்க்கே டெலிவரி செய்யப்படும்.
இந்தக் காலக்கெடுவைப் புரிந்துகொள்வது, அதற்கேற்ப திட்டமிடவும், உங்கள் ஆதார் தகவல் துல்லியமாக வைத்திருக்கவும் உதவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications