இந்தியர்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு என பல்வேறு ஆவணங்கள் அவசியமான ஒன்று. சிம் கார்டு பெறுவது, வங்கி கணக்கு திறப்பது, பள்ளியில் சேர்வது என அனைத்திற்கும் இந்த ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் ஆதார் கார்டு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. பெயர், பிறந்த தேதி, முகவரி என அனைத்து விவரங்களும் ஆதார் கார்டில் இருப்பதால் முக்கியமான அடையாள ஆவணமாக செயல்படுகிறது.
ஆதார் கார்டு வழங்கியதில் இருந்தே அதில் தங்களுடைய புகைப்படம் சரி இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்தவர்கள் பலர். இதற்காக பலரும் தங்களுடைய புகைப்படத்தை மாற்றி பிவிசி கார்டு பெற்று வருகின்றனர். இதை நீங்கள் எளிய முறையில் செய்யலாம். அது எப்படி என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

சிலருடைய ஆதார் கார்டில் அவர்களுடைய முகமா? என்பது தெரியாத அளவிற்கு தான் புகைப்படம் அச்சிடப்பட்டு வந்தது. ஆனாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படத்தை மாற்றிக் கொள்ளும் வசதியையும் யுஐடிஏஐ வழங்கியுள்ளது.
ஆதார் கார்டில் உள்ள உங்களுடைய புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். புகைப்படம் மட்டுமின்றி பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர், மெயில் ஐடி என பிற தகவல்களையும் புதுப்பிக்க முடியும்.
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி?:
ஸ்டெப் 1: ஆதார் கார்டில் உங்களுடைய புகைப்படத்தை மாற்ற Uidai.Gov.In என்ற UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 2: உள் நுழைந்த பிறகு ஆதார் எண்ட்ரோல்மென்ட் படிவத்தை டவுன்லோட் செய்து தேவையான விபரங்களை நிரப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு எடுத்துச் சென்று அந்த மையத்தில் உள்ள ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும்.
ஸ்டெப் 3: ஆதார் பதிவு மையத்தில் ஊழியர்கள் உங்களுடைய கைரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றை ஸ்கேன் செய்து பயோமெட்ரிக் விவரங்களை பெற்றுக் கொண்டு உங்கள் புதிய புகைப்படத்தை எடுப்பார்கள். ஆதாரில் உள்ள புகைப்படத்தை புதுப்பிப்பதற்கு 25 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
சில பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று புகைப்படத்தை புதுப்பிக்கும் வசதியை UIDAI வைத்துள்ளது. ஏனெனில் அடையாள மோசடி அதிக அளவில் நடைபெறுவதாலும், அரசாங்க இணையதளங்களைப் போலவே செயல்பட்டு மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து இருப்பதாலும், இது போன்ற ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று தான் சில தகவல்களை புதுப்பிக்க முடியும். அதில் உங்களுடைய பெயர் மற்றும் புகைப்படம் போன்றவையும் அடங்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications