ஆதார்: வந்தாச்சு புதிய அப்டேட்.. 'இந்த' சேவைக்கெல்லாம் சிறப்பு சலுகை, மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஆதார் அட்டையில் உங்களது விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி 2024 மார்ச் 14 வரை இலவசமாக உங்கள் ஆவணங்களை அப்டேட் செய்து கொள்ளலாம்.

முன்னதாக யுனிக் ஐடென்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா (UIDAI) இந்த இலவச அப்டேட்டுக்கான கால அவகாசத்தை 2023 டிசம்பர் 14 ஆம் தேதிவரை அளித்திருந்தது. ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற விரும்பினால் ஆவண திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று யுஐடிஓஏ அறிவுறுத்தியுள்ளது.

ஆதார்: வந்தாச்சு புதிய அப்டேட்.. 'இந்த' சேவைக்கெல்லாம் சிறப்பு சலுகை, மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஆதாரில் முகவரியை இலவசமாக அப்லோடு செய்வது எப்படி:

1. https://myaadhaar.uidai.gov.in/ இணைய தளத்துக்குச் செல்லவும்.
2. உங்கள் விவரங்களுடன் லாக்இன் செய்துவிட்டு,'பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரி அப்டேட்” என்பதை செலக்ட் செய்யவும்.
3. Update Aadhaar Online என்பதை கிளிக் செய்யவும்.
4. டெமோகிராபிக் ஆப்ஷனில் உங்கள் அட்ரஸை தேர்ந்தெடுத்து, 'Proceed to Update Aadhaar” என்பதைக் கிளிக் செய்யவும்.
5. ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமெண்ட்டை அப்லோடு செய்துவிட்டு தேவையான பிற ஆப்ஷன்களை என்டர் செய்யவும்.
6. தேவையான பணத்தை செலுத்தவும். (மார்ச் 14 வரை இது பொருந்தாது)
7. ஒரு சர்வீஸ் ரிக்வெஸ்ட் நம்பர் உருவாக்கப்படும், அதை நீங்கள் இப்போது சேமிக்கலாம்
8. அப்டேட் கோரிக்கைகளை எவ்வாறு டிராக் செய்வது:
9. ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை மாற்றுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, நீங்கள் ஒரு URN (அப்டேட் ரிக்வெஸ்ட் நம்பர்) பெறுவீர்கள். URN எண் உங்கள் ஸ்கிரீனில் காட்டப்பட்டு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்படும். உங்கள் ஆதார் அட்டை அப்டேட்டை டிராக் செய்வதற்கு, https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆதாரில் முகவரியை எவ்வாறு அப்டேட் செய்வது:

ஸ்டெப் 1: https://www.uidai.gov.in/ இல் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
ஸ்டெப் 2: அடுத்து 'My Aadhaar' மெனுவைக் கண்டறியவும்.
ஸ்டெப் 3: மெனுவிலிருந்து "Update Your Aadhaar" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: பிறகு, தேர்வுகள் பட்டியலில் இருந்து, "update demographics data online." என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: ஆதார் அட்டை சுய சேவை போர்ட்டலுக்கான ரீடிசைன் செய்யப்பட்ட இன்டர்பேஸ் உங்கள் ஸ்கிரீனில் தோன்றும்.
ஸ்டெப் 6: இந்த நேரத்தில் "Proceed to update Aadhaar" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 7: அவசியமானால், உங்கள் ஆதார் அட்டை எண்ணை என்டர் செய்து கேப்ட்சா சரிபார்ப்பை முடிக்கவும்.
ஸ்டெப் 8: அடுத்து, "Send OTP." என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 9: OTP பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
ஸ்டெப் 10: OTP சரிபார்ப்புக்குப் பிறகு,'Update Demographics Data' விருப்பத்துக்குச் செல்லவும்.
ஸ்டெப் 11: இப்போது மாற்றங்களைச் செய்ய, "address" விருப்பத்தைப் பயன்படுத்தவும்.
ஸ்டெப் 12: உங்கள் புதிய முகவரிக்கான தகவலை என்டர் செய்யவும். அது உங்கள் ஆதார் அட்டையில் தோன்றும்.
ஸ்டெப் 13: சப்போர்ட்டிங் டாக்குமெண்ட் புரூஃப்பை ஸ்கேன் செய்யப்பட்ட நகலாக அப்லோடு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 14: "Proceed" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
ஸ்டெப் 15: என்டர் செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் துல்லியமானதாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.
ஸ்டெப் 16: பேமெண்ட் பக்கத்தில் தேவையான கட்டணத்தை உருவாக்கவும்.
ஸ்டெப் 17: சேவையை சரிபார்க்க OTP ஐப் பயன்படுத்தவும்.
ஸ்டெப் 18: உங்கள் வேலையைச் சேமித்து, புரோகிராமை டவுண்லோடு செய்யவும்.
ஸ்டெப் 19: URN ஐப் பயன்படுத்தி அட்ரஸ் அப்டேட்களை டிராக் செய்யவும்.

ஆதாரில் மொபைல் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?: !

1. UIDAI இணைய போர்ட்டலான -- uidai.gov.in என்பதற்கு செல்லவும்.
2. நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் போன் நம்பரை என்டர் செய்த பிறகு பொருத்தமான பகுதிகளில் கேப்ட்சாவை உள்ளிடவும்.
3. "Send OTP" என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஃபோன் நம்பருக்கு வந்த எஸ்எம்எஸ்-இல் அனுப்பப்பட்ட OTP ஐ பதிவிடவும். .
4. இப்போது "Submit OTP and Proceed" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. பின்வரும் ஸ்கிரீனில் "Online Aadhaar Services." என்பதில் ஒரு டிராப்டவுண் பட்டியல் தோன்றும். அதில் நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் ஒன்றை, கிளிக் செய்யவும். மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பொருத்தமான தகவலை உள்ளிடவும்.
6. மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு புதிய பக்கம் திறக்கும். நீங்கள் இப்போது ஒரு கேப்ட்சாவை நிரப்ப வேண்டும். இதைத் தொடர்ந்து உங்கள் நம்பருக்கு OTP வரும். OTP ஐ உறுதிசெய்த பிறகு "Save and Proceed" என்பதைக் கிளிக் செய்யவும்.
7. ஆன்லைன் மூலம் அப்பாயின்ட்மெண்ட் சந்திப்பு செய்து கொண்டு, அருகில் உள்ள ஆதார் மையத்துக்குச் செல்லவும்.
8. உங்களது டேட்டாபேஸ்
90 நாட்களுக்குள் உங்கள் தற்போதைய மொபைல் எண்ணுடன் அப்டேட் செய்யப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+