உங்க ஆதார் கார்ட்-ஐ உடனே செக் பண்ணுங்க.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

ஆதார் கார்டில் பல்வேறு ஆவணங்களை இலவசமாக பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மார்ச் 14ஆம் தேதியை கடைசியாக அறிவித்த நிலையில், தற்போது இதை மத்திய அரசு ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக இந்திய தனியார் அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.

இது குறித்து UIDAI டிவிட்டரில் செய்துள்ள பதிவில், "ஆதார் வைத்திருப்பவர்கள் பலருக்கும் பயனளிக்கும் வகையில், இணையதளம் வழியாக இலவசமாக ஆவணங்களை பதிவேற்றும் வசதியை ஜூன் 14, 2024 வரை UIDAI நீட்டித்துள்ளது.

உங்க ஆதார் கார்ட்-ஐ உடனே செக் பண்ணுங்க.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

இந்த இலவச சேவை, myAadhaar இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். ஆதார் விவரங்களை மக்கள் புதுப்பித்து வைக்குமாறு UIDAI வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தால், இதுவரை எந்த புதுப்பிப்பும் செய்யப்படவில்லை என்றால், மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் அரசின் நல திட்டங்களின் செயல்பாடுகளை சரிபார்க்கும் பொருட்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (PoI/PoA) ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு UIDAI அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் தகவல்களை புதுப்பித்துக் கொள்ள இரண்டு வழிகளை வழங்குகிறது: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள்.

ஆதார் விவரங்களை இணையதளம் வழியாக புதுப்பிப்பது எப்படி?

ஆன்லைன் முறை:

1. படி: https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) கொண்டு உள்புகுங்கள்.

2. படி: உங்கள் சுயவிவரம் மற்றும் முகவரி விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.

3. படி: காண்பிக்கப்படும் விவரங்கள் தவறாக இருந்தால் (சரியாக இருந்தால், அவற்றைத் திருத்துவதற்கான படிகளைத் தொடரவும். (விவரங்கள் சரியாக இருந்தால், 'மேற்கூறிய விவரங்கள் சரியாக உள்ளன என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்’ என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.)

4. படி: நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் அடையாள ஆவணத்தை கீழ்துளி பட்டியலில் (Drop-down Menu) இருந்து தேர்ந்தெடுக்கவும்.

5. படி: உங்கள் அடையாள ஆவணத்தை பதிவேற்றவும் (அளவு 2 MB க்கும் குறைவாக இருக்க வேண்டும்; கோப்பு வடிவம் JPEG, PNG அல்லது PDF)

6. படி: நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் முகவரி ஆவணத்தை கீழ்துளி பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.

7. படி: உங்கள் முகவரி ஆவணத்தை பதிவேற்றவும் (அளவு 2 MB க்கும் குறைவாக இருக்க வேண்டும்; கோப்பு வடிவம் JPEG, PNG அல்லது PDF)

8. படி: உங்கள் ஒப்புதலை சமர்ப்பிக்கவும்.

ஆதார் விவரங்களை நேரடியாக (Offline) புதுப்பிப்பது எப்படி?

1. படி: https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

2. படி: அருகில் உள்ள ஆதார் மையங்களை கண்டறிய, 'அருகில் உள்ள மையங்கள்' (Centres Nearby) என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.

3. படி: அருகில் உள்ள ஆதார் மையங்களை காண உங்கள் இருப்பிட விவரங்களை உள்ளிடவும்.

4. படி: உங்கள் பின்கோடு பகுதியில் உள்ள ஆதார் மையங்களை கண்டறிய:

5. படி: 'பின்கோடு மூலம் தேடல்' (Search by PIN Code) என்ற தாவலைக் கிளிக் செய்யவும்.

6. படி: உங்கள் பகுதி பின்கோடை உள்ளிடவும். அந்த பகுதியில் உள்ள ஆதார் மையங்கள் காண்பிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+