2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ஆதார் எண்ணுக்கு பதிலாக ஆதார் பதிவு எண்ணை (Aadhaar Enrolment ID) பயன்படுத்துவதற்கான வசதி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் நேற்று தனது 7-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் ஆதார் நம்பர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மோசடியைத் தடுக்கும் விதமாக ஆதார் பதிவு எண்ணை, இனி பான் கார்டு பெற பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் எப்போது அமலுக்கு வரும்?: இந்த திருத்தம் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான புதிய தேசிய ஓய்வூதிய திட்டம்: 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான புதிய தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஓய்வூதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கலாம். இதை பெற்றோர்கள் தங்களுடைய பெயரிலேயே தொடங்கலாம். அதன் பின் அவர்கள் மேஜரானதும், அவர்களுடைய பெயருக்கு மாற்றியமைக்கப்படும்.
ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்துவதற்கான தற்போதைய விதி: 2017-ஆம் ஆண்டு முதல், ஆதார் எண் இல்லாதவர்கள் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது அல்லது வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தது.
இந்த விதி ஏன் நீக்கப்பட்டது?: 2017-ஆம் ஆண்டு முதல் ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு ஆதார் எண் இருப்பதால், ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தும் வசதியை நீக்குவது அவசியம்.
ஏனெனில் போலியான பான் கார்டு பெற்று சிலர் ஐடிஆர் தாக்கல் செய்யது ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இந்த காரணத்தினால் தற்போது இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் ஆதார் பதிவு எண்ணை வைத்து பான் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள், குறிப்பிட்ட தேதியில் தங்களுடைய ஆதார் நம்பர் வந்ததும், ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும்.
ஆதார் என்றால் என்ன?: ஆதார் என்பது 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும், இது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் செயல்படுகிறது. ஆதார் பதிவு ஐடி (EID) என்பது ஒவ்வொரு ஆதார் விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்படும் 28 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும்.
ஆதார் பதிவு ஐடியை எவ்வாறு கண்டுபிடிப்பது?:
ஸ்டெப் 1: UIDAI இணையதளத்தைப் பார்வையிடவும்
ஸ்டெப் 2: "My Aadhaar" என்பதன் கீழ், உள்ள EID/UID-ஐக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: ஆதார் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் விண்ணப்பத்தின்படி உங்கள் முழுப் பெயரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்து, "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும்
ஸ்டெப் 6: OTP-ஐ என்டர் செய்யவும். EID விவரங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
இல்லையெனில், உங்கள் பதிவு ஐடியை மீட்டெடுக்க, UIDAI-இன் 1947என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைக்கலாம்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications