200 கோடி.. அதுவும் 6 மாசத்துல! ஆதார் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு.. இனி மோசடிக்கு வாய்ப்பே இல்லை!

நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தகவல் பரிமாற்றம் மட்டுமில்லாமல் பணப்பரிமாற்றத்தையும் மிகவும் எளிமையாக்கி விட்டது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு நிதி சார்ந்த மோசடிகளையும் நாம் காண்கிறோம்.

ஆதார் அமைப்பு அறிக்கை: தகவல் திருட்டு, அடையாள திருட்டு, தேர்வுகளில் ஆள்மாறாட்டம், ஏழைகளுக்கு செல்ல வேண்டிய அரசின் திட்டங்களை பணக்காரர்கள் அனுபவிப்பது என பல பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒரு நடைமுறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆதாரை மேலாண்மை செய்யக்கூடிய யுஐடிஏஐ எனப்படும் தனித்துவ அடையாள அமைப்பு இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் ஆதார் முக அடையாள சரிபார்ப்பு அடிப்படையில் 200 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது .

200 கோடி.. அதுவும் 6 மாசத்துல! ஆதார் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு.. இனி மோசடிக்கு வாய்ப்பே இல்லை!

200 கோடி பரிவர்த்தனைகள்: இந்தியர்கள் பாதுகாப்பான பரிவர்த்தனைகள் மற்றும் பேப்பர் இல்லாத பரிவர்த்தனைகளுக்கு படிப்படியாக மாறி வருவதையே இது காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் ஆதார் முக அடையாள சரிபார்ப்பு முறையில் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 50 கோடியாக தான் இருந்தது, இது அடுத்த ஆறு மாதங்களிலேயே 100 கோடி என இரண்டு மடங்கானது . 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இது இன்னும் இரட்டிப்பாகி 200 கோடி என்ற மைல்கல்லை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிகரிக்கும் நம்பிக்கை: சிறு கிராமங்களில் தொடங்கி பெரு நகரங்கள் வரை வங்கிகள், அரசு அலுவலகங்கள் , தபால் நிலையங்கள் , தேர்வு மையங்கள் ஆகியவற்றில் ஆதார் முக அடையாள சரிபார்ப்பு முறை மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருப்பதையே இது காட்டுவதாக யுஐடிஏஐ தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் தங்களுக்கான நலத்திட்டங்களை பெறுவதில் தொடங்கி தங்களுடைய பணத்தை பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் முக அடையாள சரி பார்க்கும் முறையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என கூறியுள்ளது.

ஆதார் முக அடையாள சரிபார்ப்பு: இந்தியாவில் நாம் பெரும்பாலான நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி கணக்கு தொடங்குவது, டீமேட் கணக்கு தொடங்குவது , போட்டித்தேர்வு எழுதுவது என அனைத்திற்கும் ஆதாரை நமக்கான அடையாள ஆவணமாக வழங்குகிறோம். இதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கொண்டு வரப்பட்டது தான் ஆதார் முக அடையாள சரிபார்ப்பு முறை.

200 கோடி.. அதுவும் 6 மாசத்துல! ஆதார் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு.. இனி மோசடிக்கு வாய்ப்பே இல்லை!

எப்படி செயல்படுகிறது: நீங்கள் ஒரு அரசு நல திட்டத்திற்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் அல்லது முக்கியமான ஒரு போட்டித் தேர்வுக்கு செல்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அங்கே உங்களின் விவரங்களை சரிபார்க்க ஆதார் முக அடையாள சரிபார்ப்பு பயன்படுத்தப்படும். அதாவது நேரடியாக உங்களை புகைப்படம் எடுப்பார்கள், அந்த புகைப்படத்தை உங்களின் ஆதார் எண்ணுடன் இருக்கும் புகைப்படத்துடன் ஒப்பிடுவார்கள். இது பொருந்தினால் அந்த திட்டத்திற்கே நீங்கள் விண்ணப்பம் செய்ய முடியும் அல்லது அந்த தேர்வுக்கு நீங்கள் செல்ல முடியும்.

பண பரிவர்த்தனையில் எப்படி: யுபிஐ முறையில் நாம் எளிதாக பண பரிவர்த்தனை செய்கிறோம். ஆனால் சில சமயங்களில் இதிலும் நிதி மோசடிகள் நடக்கின்றன. பாஸ்வேர்டு, பின் நம்பர் ஆகியவற்றை மோசடியாளர்கள் திருடுகின்றனர். ஆனால் நம்முடைய முகம் போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் நமக்கு தானே சொந்தமானவை அதனை யாராலும் திருட முடியாது அல்லவா. அதன் அடிப்படையில் தான் பண பரிவர்த்தனைகளிலும் ஆதார் முக அடையாள சரிபார்ப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலக கணக்குகளில் பண பரிமாற்றத்தில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாம் ஒருவருக்கு பணம் அனுப்ப நம்முடைய முக அடையாளம் சரிபார்த்தால் போதும்.

ஏன் வரவேற்பு: பாதுகாப்பானது, பயன்படுத்த எளிதானது நம்பகத்தன்மை வாய்ந்தது ஆகியவே இதன் வரவேற்புக்கு காரணமாக இருக்கிறது . பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் ,விவசாயிகளுக்கான பிரதமர் கிஷான் சம்மன் நிதி திட்டம், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு ஆதார் முக அடையாள சரிபார்ப்பு பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் பொதுவிநியோகத் திட்டத்திலும் இது கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது. வயதானவர்களுக்கு கைரேகை, கருவிழி அடையாள முறையில் சிக்கல் இருப்பதால் முக அடையாள சரிபார்ப்பு பயன்படுத்துவது எளிதாக உள்ளது. எஸ் எஸ் சி போன்ற அமைப்புகளின் போட்டி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் போதும் ஆதார் முக அடையாள சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+