ஆதார் கார்டை வைத்திருக்கும் நபர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் கார்டை புதுப்பிக்குமாறு UIDAI பரிந்துரைக்கிறது. ஆதார் கார்டு நம் நாட்டில் மிகவும் முக்கியமான முகவரி ஆவணமாக உள்ளது. எனவே ஆதார் கார்டில் கண்டிப்பாக முகவரி சார்ந்த விவரங்கள் அனைத்தும் துல்லியமானதாக இருக்க வேண்டும். அரசாங்க நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் ஆகியவற்றை பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. இதனால் தான் அதில் உள்ள விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்கும் படி அரசு அறிவுறுத்துகிறது.
ஆதார் கார்ட் அப்டேட் செய்வதற்கு எவ்வளவு கட்டணம்?: செப்டம்பர் 14, 2024 வரை myAadhaar போர்ட்டலைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் கார்டை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்யலாம். ஆனால் ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று ஆஃப்லைனில் அப்டேட் செய்வதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் ஆதார் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்பட்ட ஆதார் நம்பர் மற்றும் OTP-ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 2: உங்கள் ப்ரொபைலில் காட்டப்பட்டுள்ள உங்கள் அடையாளம் மற்றும் முகவரி விவரங்களைச் சரிபார்க்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் ப்ரொபைலில் காட்டப்படும் விவரங்கள் சரியாக இருந்தால், "I verify that the above details are correct" என்பதைக் கிளிக் செய்யவும். அப்படி இல்லை என்றால் அடுத்த ஸ்டெப்புக்கு செல்லவும்.
ஸ்டெப் 4: நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் ஆவணத்தை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: உங்கள் அடையாள ஆவணத்தைப் பதிவேற்றவும். அனால் அதன் அளவு 2 MB-க்கும் குறைவாக இருக்க வேண்டும். நீங்கள் பதிவேற்றும் ஃபார்மேட் JPEG, PNG அல்லது PDF ஆகியவற்றில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஸ்டெப் 6: நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து முகவரி ஆவணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 7: உங்கள் முகவரி ஆவணத்தை பதிவேற்றவும்.
ஆதார் கார்டில் பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி சரியாக இல்லை என்றால் என்ன செய்வது?: ஆதார் கார்டில் உங்களுடைய பெயர் பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள் சரியானதாக இல்லை என்றால் அதை மாற்றி அப்டேட் செய்வதற்கு கண்டிப்பாக ஆதார் பதிவு மையங்களுக்கு தான் செல்ல வேண்டும். அடையாள திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு இது போன்ற முக்கிய விவரங்களை ஆன்லைனில் மாற்றம் செய்ய முடியாது.
ஆதாரில் முகவரியை இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஆனால் ஆதார் பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டுமானால் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி செய்து கொள்ளலாம். மேலும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்குப் பிறகு ஆன்லைனிலும் கட்டணம் செலுத்தி தான் விவரங்களைப் புதுப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications