வீட்டில் 5 முதல் 17 வயதுள்ள குழந்தை இருக்கா? ஆதார் அப்டேட் செஞ்சிட்டிங்களா! செப்டம்பர் 30 தான் டெட்லைன்!

நம் நாட்டில் பெரும்பாலான சேவைகளைப் பெறுவதற்கு முக்கியமாக கேட்கப்படும் அரசு ஆவணம் ஆதார் கார்டு. இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டை வழங்கியுள்ளது. பேங்க் அக்கவுண்ட் திறக்க, அரசு திட்டங்களில் இணைய, பாஸ்போர்ட் பெற, மொபைல் சிம் கார்டு வாங்க என சில சேவைகளுக்கும் நீங்கள் கட்டாயம் ஆதார் கார்டை வழங்க வேண்டும். எனவே ஆதாரில் உங்களுடைய விவரங்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் மொபைல் நம்பரை மாற்றினாலும் கட்டாயம் அந்த நம்பரை ஆதாரில் அப்டேட் செய்வது முக்கியம்.

பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளுக்கும் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும். 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு UIDAI பயோமெட்ரிக் அப்டேட்டை கட்டாயம் ஆக்கியுள்ளது. பயோமெட்ரிக் அப்டேட்டை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இலவசமாக செய்து கொள்ளலாம். இன்றுடன் டெட்லைன் முடிகிறது. எனவே இதுவரை உங்கள் குழந்தைக்கு பயோமெட்ரிக் அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே முடிப்பது நல்லது.

வீட்டில் 5 முதல் 17 வயதுள்ள குழந்தை இருக்கா? ஆதார் அப்டேட் செஞ்சிட்டிங்களா! செப்டம்பர் 30 தான் டெட்லைன்!

முக்கியமாக குழந்தைகளின் ஆதார் விபரங்களை தெளிவாக பராமரிக்கவும், எந்த சேவை இடையூறும் இன்றி ஆதார் கார்டை பயன்படுத்துவதற்காகவும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டிலும் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் ஆதார் கார்டை உடனே அப்டேட் செய்வது அவசியம். காலக்கெடு செப்டம்பர் 30,2026 வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரை எழுதும் வரை காலக்கெடு நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

Also Read

ஒரு வேளை காலக்கெடு இனிமேலும் நீட்டிக்கப்படவில்லை என்றால் இதன் பிறகு செய்யப்படும் பயோமெட்ரிக் அப்டேட் அனைத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். UIDAI இணையதளத்தின் தகவல்படி.. காலக்கெடுவிற்கு பிறகு செய்யப்படும் பயோமெட்ரிக் அப்டேட்டிற்கு ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும்.

பயோமெட்ரிக் அப்டேட் அவசியமா?: சிறு குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. அவர்கள் வளர வளர முக அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாகவே சின்ன குழந்தைகளுக்கு கைரேகை மற்றும் கருவிழி விவரங்கள் ஆதார் கார்டில் பதிவு செய்யப்படுவதில்லை.

அவர்கள் 5 வயதை அடையும்போது முதல் முறையாக கருவிழி மற்றும் முகம் ஆதார் கார்டில் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு 15 வயதை அடையும் போது மற்றொரு அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இன்னும் இதை செய்யவில்லை என்றால் இன்று இலவசமாக செய்து கொள்ளலாம். செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் செய்யும் எந்த ஒரு அப்டேட்டுக்கும் கட்டணம் விதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் அப்டேட் செய்ய பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?: உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்திற்கு குழந்தையை கூட்டிச் சொல்லுங்கள். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய ஆதார் விவரங்களையும் சேர்த்து எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு குழந்தையின் விவரங்கள் அப்டேட் செய்யப்படும்.

குழந்தைகளுக்கு இந்த பயோமெட்ரிக் அப்டேட் செய்வது மிக மிக முக்கியம். ஏனென்றால் அடுத்தடுத்து பள்ளியில் சேர்வது முதல் கல்லூரியில் சேர்வது வரை எல்லாவற்றுக்கும் ஆதார் கார்ட் தேவை. கார்டில் உங்களுடைய உங்கள் குழந்தையின் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.இதை செய்வதால் எதிர்காலத்தில் அரசு சேவைகளை பெறுவதில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+