செப்டம்பர் மாதம் நெருங்கி வருகிறது. அதனுடன் சில முக்கிய நிதி சார்ந்த காலக்கெடுக்களும் வரவிருக்கின்றன. இந்த காலக்கெடுவை தவறவிட்டால், உங்களுக்கு சில பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதார் இலவச அப்டேட், சிறப்பு FD காலக்கெடுக்கள் மற்றும் கிரெடிட் கார்டு மாற்றங்கள் உள்ளிட்ட செப்டம்பர் மாதத்தில் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் முக்கியமான காலக்கேடு குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
ஆதார் இலவச அப்டேட்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இலவச ஆதார் புதுப்பிப்பை ஜூன் 14 முதல் செப்டம்பர் 14, 2024 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. எனவே குறிப்பிடப்பட்ட இந்த தேதிக்குள் ஆதார் விவரங்களில் மாற்றம் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.

IDFC FIRST பேங்க் கிரெடிட் கார்டு மாற்றங்கள்: IDFC FIRST பேங்க் தனது கிரெடிட் கார்டு கட்டண விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் குறைந்தபட்ச கட்டணத் தொகை (MAD) மற்றும் கட்டண தேதி மாற்றங்கள் ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள் செப்டம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று IDFC FIRST பேங்க் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய 18 நாட்களுக்கு பதிலாக, IDFC FIRST பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டண தேதியை அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களாக குறைத்துள்ளது. பழைய கட்டணத் தேதி: அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 18 நாட்கள் புதிய கட்டணத் தேதி: அறிக்கை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள். இனி 15 நாட்களில் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.
HDFC பேங்க் கிரெடிட் கார்டு லாயல்டி திட்ட விதிகளில் மாற்றம்: HDFC பேங்க் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளில் கிரெடிட் கார்டு லாயல்டி திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. இந்தப் புதிய விதிகள் செப்டம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதுகுறித்த செய்தியை அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கி மெயில் மூலம் தெரிவித்துள்ளது.
IDBI பேங்கின் சிறப்பு FD-களுக்கான காலக்கெடு நீட்டிப்பு: ஐடிபிஐ பேங்க் 300 நாட்கள், 375 நாட்கள் மற்றும் 444 நாட்கள் கொண்ட சிறப்பு FD-களுக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இப்போது இந்த வரிசையில் புதிதாக 700 நாட்கள் கொண்ட FD திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
பொது குடிமக்களுக்கு, 300 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் FD-களில் 7.05% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் 300 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் FD-களில் 7.55% வட்டியைப் பெறலாம்.
375 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் FD-களுக்கு, வங்கி 7.15% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 375 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் FD-களுக்கு 7.65% வட்டியைப் பெறலாம். ஐடிபிஐ பேங்க் இந்த சிறப்பு FD-களுக்கான காலக்கெடுவை ஜூன் 30, 2024 முதல் செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
இந்தியன் பேங்கின் சிறப்பு FD-களுக்கான காலக்கெடு நீட்டிப்பு: இந்தியன் பேங்க் இப்போது "Ind Super" என்னும் 300 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட சிறப்பு FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டியும் மற்றும் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டி விகிதங்களையும் வழங்குகிறது.
இந்த சிறப்பு FD திட்டத்திற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 30 வரை மட்டுமே இந்தத் திட்டம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் சிந்து பேங்கின் FD-களுக்கான காலக்கெடு: 222 நாட்கள் கொண்ட சிறப்பு FD-களுக்கு 6.30% வட்டி வழங்கப்படுகிறது. 333 நாட்கள் கொண்ட சிறப்பு FD-களுக்கு 7.15% வட்டி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு FD-களுக்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2024 ஆகும்.
RuPay கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்டுகள்: செப்டம்பர் 1, 2024 முதல், ருபே கிரெடிட் கார்டு பயனாளர்கள் UPI பரிவர்த்தனைகளுக்கு பிற கிரெடிட் கார்டு நெட்வொர்க்குகளிலிருந்து பெறப்படுவதைப் போன்ற ரிவார்டுகளைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications