ஆதார் - பான் இணைப்பு கடைசி நாள் 2022 மார்ச் 31 வரை நீட்டிப்பு..!

மத்திய அரசு ஆதார் எண் மற்றும் பான் எண்-ஐ இணைக்கச் செப்டம்பர் 30ஆம் தேதியைக் கடைசி நாளாக அறிவித்து இருந்து நிலையில், இந்த இணைப்புச் செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை உணர்ந்த மத்திய அரசு ஆதார் - பான் இணைக்க மார்ச் 31, 2022 வரையில் கால நீட்டிப்பு செய்துள்ளது.

இதன் மூலம் மக்கள் எவ்விதமான அவசரமும் இல்லாமல் ஆதார் - பான் இணைப்பைச் செய்து முடிக்க முடியும்.

ஆதார்- பான் இணைப்பு

ஆதார்- பான் இணைப்பு

கொரோனா தொற்று மூலம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணர்ந்து உள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விதமாகவும், வருமான வரித் தளத்தில் இருக்கும் பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும் மத்திய அரசு ஆதார்- பான் இணைக்க 2022ஆம் ஆண்டு மார்ச் 31 வரையில் கால நீட்டிப்பு கொடுக்க அனுமதித்துள்ளது என மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது.

பிற வரி அறிக்கைகள்

பிற வரி அறிக்கைகள்

இதேபோல் அபராதம் செலுத்துதல், பினாமி சொத்துக்கள் மீதான நோட்டீஸ் அனுப்ப கடைசி நாளாக இருந்த செப்டம்பர் 30ஆம் தேதியை மார்ச் 31, 2022 வரையில் நீட்டித்துள்ளதாக மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது.

ரூ.20 லட்சம் வைப்பு நிதி

ரூ.20 லட்சம் வைப்பு நிதி

இதோடு தனியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில் ST பிரிவில் வரும் மக்களின் வங்கி வைப்புத் தொகை 20 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் அத்தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தில் அவர்களுக்கு டிசிஎஸ் பிடித்தம் செய்யக் கூடாது என அறிவித்துள்ளது.

பழங்குடி மக்கள்

பழங்குடி மக்கள்

அதாவது பழங்குடி மக்கள் வசிக்கும் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் வங்கிகள் (Scheduled Bank) இனி வரும் காலத்தில் 20 லட்சம் ரூபாய் வரையிலான வைப்பு நிதிக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வட்டியை பிடித்தம் செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. இது பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் இருக்கும் வங்கிகளுக்கு மட்டுமே, மற்ற பகுதியில் இருக்கும் வங்கிகள் இயல்பான முறையில் இயங்கும். இதன் மூலம் பலர் நன்மை அடைவார்கள்.

மத்திய நேரடி வரித்துறை

மத்திய நேரடி வரித்துறை

இந்தச் சலுகையைப் பெறவும், வங்கிகள் இந்தச் சலுகையை அளிக்கவும் சில முக்கியமான ஆவணங்களைச் சமர்ப்பித்து உறுதி பெற்ற பின்னரே அளிக்கப்படும். மேலும் ஒரு வருடம் முழுவதும் 20 லட்சம் அளவீடு கொடுக்கப்பட்ட உள்ள காரணத்தால் முறைகேடுகளைத் தடுக்க ஆவணங்கள் சரிபார்ப்பை முக்கியமானதாகக் கருதுகிறது மத்திய நேரடி வரித்துறை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+