பொண்டாட்டி பிறந்த நாள் முதல் வருமான வரி செலுத்தும் கடைசி நாள் வரையில் யாரும் மறக்க கூடாது, அப்படி மறந்துவிட்டால் பொண்டாடிக்கிட்ட அடியும், வருமான வரி துறையிடம் அபராதமும் தான் மிச்சம். ஒவ்வொரு மாதமும் முக்கியமான விஷயங்களை செய்து முடிக்க வேண்டிய கடைசி நாள் இருக்கும், அப்படி ஜூன் மாதம் மக்கள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களும், கடைசி நாளும் தொகுக்கப்பட்டு உள்ளது.
7 ஜூன் 2023 : மே, 2023 இல் கழிக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட வரியை டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி. வருமான வரி சலான் இல்லாமல் அரசு அலுவலகத்தால் கழிக்கப்பட்ட / சேகரிக்கப்படும் அனைத்து வரி தொகையும் செலுத்தப்பட்ட அதே நாளில் மத்திய அரசின் கிரெடிட்டில் செலுத்தப்படும் என்பதை மறக்க கூடாது, ஆயினும் வரி முழுமையாக செலுத்தப்பட்டு உள்ளதா என்பதை 7 ஜூன் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

14 ஜூன் 2023 : ஏப்ரல் மாதத்தில் 194-IA, 194-IB, 194M மற்றும் 194S ஆகிய பிரிவுகளின் கீழ் கழிக்கப்பட்ட வரிக்கான TDS சான்றிதழை வழங்குவதற்கான கடைசி தேதி.
15 ஜூன் 2023 : மார்ச் காலாண்டுக்கான TDS சான்றிதழ் கொடுக்க வேண்டிய கடைசி தேதி, 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டுக்கான முதல் தவணை அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த கடைசி தேதி, நிறுவனங்கள், ஊழியர்களுக்கு வரி அறிக்கை கொடுக்க வேண்டிய கடைசி தேதி.
30 ஜூன் 2023 : பான் ஆதார் எண் இணைக்க கடைசி தேதி, இந்த வாய்ப்பை தவறவிட்டால் பான் எண் ரத்து செய்யப்படும். மீண்டும் ஆக்டிவேட் செய்ய அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications