சென்னை: புதிதாக ஒரு பிரச்சனை பான் மற்றும் ஆதார் கார்டு இணைத்தவர்களுக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள், பல வங்கி சார்ந்த சேவைகள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அது என்னவென்றால், தென்னிந்தியாவில் வசிக்கும் பலர், தங்களது பெயர் ஆதார் கார்டிலும் பான் கார்டிலும் வேறு வேறாக இருப்பதால் பெரிய பிரச்னையை சந்திக்க தொடங்கியுள்ளனர்.
ஆதார் கார்டும் பான் கார்டும் பேங்க் பரிவர்த்தனைகளில் தேவைப்படும் முக்கிய ஆவணங்களாக இருப்பதால், இது போன்ற அனைத்து அரசாங்க ஆவணங்களிலும் உங்களது பெயர், முகவரி, தொலைதொடர்பு விவரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஏதேனும் ஒரு அரசாங்க ஆவணத்தில் உங்களது விவரங்கள் மாற்றாக இருந்தாலும் அது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.

மத்திய அரசு ஏற்கனவே ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதனை பொருட்படுத்தாத சுமார் 11.48 கோடி மக்களின் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அவர்களிடம் இருந்து 600 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்துள்ளது.
வருமானவரித்துறையினரால் வழங்கப்படும் பான் கார்டு, அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். பான் எண் என்று சொல்லப்படுகிற பத்து இலக்க எண்ணானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மேலும், வரி செலுத்துகிற அனைவருக்கும் பான் கார்டு அவசியமான ஒன்றாகும். ஆதார் அட்டையினை பான் கார்டுடன் இணைக்க மத்திய அரசு நிறைய கால அவகாசங்களை தந்தது. முதலில் பான் - ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு ஒரு வருடம் அவகாசம் தரப்பட்டது. அதன் பின் 6 மாத கூடுதல் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கியது. அதற்கு பின்னும் ஆதார் - பான், இணைக்காத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் இணைப்பை செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. அதன் பின்னர் 1000 ரூபாய் அபராதமாக மத்திய அரசு மாற்றியது.
தற்போது மக்கள் சிலர் தங்களது ஆதார் கார்டிலும் பான் கார்டிலும் ஒரே மாதிரியான பெயர் இல்லை என்று சில பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கான காரணம், தென்னிந்தியாவில் வசிக்கும் பலர் தங்களின் இனிஷியலை பயன்படுத்துகின்றனர். ஆனால் பான் கார்டு குடும்பப்பெயரை கட்டாயம் ஆக்குகிறது. இதனால் அவர்களின் மற்ற கார்டுகளில், குறிப்பாக ஆதார் கார்டில் இனிஷியலும் பான் கார்டுகளில் அவை இல்லாமல் போகும்போது, அவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.
இவ்வாறு பெயர் பல்வேறு ஆவணங்களில் ஒரே மாதிரியாக இல்லாத பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்வது மற்றும் வங்கியில் பரிவர்த்தனை அல்லது லோன் எடுப்பது போன்ற செயல்களைச் செய்யும் போது இது பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவில் மட்டும் 57.25 கோடி மக்கள் தங்களுடைய ஆதார் பான் கார்டு ஆகியவற்றை இணைத்துள்ளனர். இதில் 70.24 கோடி பேர், பான் கார்டு வைத்துள்ளனர். இதில் 11.48 கோடி முடக்கப்பட்ட பான் கார்டுகள், மத்திய அரசின் கால அவகாசத்தையும் மீறி இணைக்கப்படாதவை. அதாவது இணைக்காதவர்களின் பான் கார்டு டீ ஆக்டிவேட் செய்யப்படும். மேலும், இதனால் வங்கி சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications