டெல்லி: வீதிகளில் தக்காளி விற்கும் வியாபாரி முதல் முகேஷ் அம்பானி வரையிலும், கொரோனாவின் உக்கிர தாண்டவத்தினால் நஷ்டத்தினை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்த கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
இந்த நிலையில் மார்ச் 31 ஆதார் பான் இணைப்புக்கு காலக்கெடுவாக கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இன்னும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் மார்ச் 30வுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், ஆதார் எண்ணுடன் பான் கார்டினை இணைக்க ஜூன் 30, 2020 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல முறை இந்த கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், இனியும் இது நீட்டிக்கப்படாது. ஏனெனில் ஏற்கனவே போதிய அவகாசம் கொடுத்தாயிற்று. அதனால் இந்த முறையும் அவகாசம் கிடைக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், நாட்டில் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் இந்த அவகாசத்தினை நீட்டித்துளள்து மத்திய அரசு.
மத்திய நேரடி வரிகள் வாரியமும் (CBDT), ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கடந்த 2016-17ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அப்போது அறிவுறுத்தியது.
இந்த நிலையில் 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த சட்டத்தின் படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டது. எனினும் இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால், பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இறுதியாக தற்போது ஜூன் 30, 2020 என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்புறம் என்ன உங்க பான் ஆதாரை இணைக்க இது தான் சரியான வாய்ப்பு..இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கோங்க..
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications