ஆதார் – பான் இணைப்பு செய்துவிட்டீர்களா? இன்றே கடைசி நாள்.. ஆன்லைனில் எப்படி இணைப்பது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே சென்று இணைவிடுங்கள். ஏனெனில் இன்றே (மார்ச் 31, 2021) கடைசி நாள்.

ஏற்கனவே இந்த இணைப்புகாக பலமுறை அவகாசம் கொடுத்த அரசு, இந்த முறையும் மீண்டும் அவகாசம் கொடுக்குமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆக உங்கள் பான் நம்பரை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது, வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடைகிறது.

இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது பலமுறை கெடு விதித்திருந்தது? உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகக் கூடும். அதோடு 10,000 ரூபாய் வரை அபாதாரமும் விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலமுறை அவகாசம்

பலமுறை அவகாசம்

நாட்டில் பரவி வரும் கொரோனா காரணமாக இதுவரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் இனியும் இது நீட்டிக்கப்படுமா என்பது சந்தேகமாகத் தான் பார்க்கபப்டுகிறது. ஏனெனில் இன்று வரையிலும் பலர் இணைக்கவில்லை என்பதே உண்மை. ஆக இதுவரை இணைக்காவிடில் உடனே சென்று இணைத்து விடுங்கள். ஏனெனில் உங்கள் பான் எண் செல்லாமல் போக கூட வாய்ப்புள்ளது.

பல சிக்கல்கள் வரலாம்

பல சிக்கல்கள் வரலாம்

ஆதார் பான் எண் இணைக்காவிடில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான் கார்டை 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான்கார்டை பயன்படுத்தும் போது அதற்கு பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆக இந்த மாதம் 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். எனினும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கி விடும்.

உங்கள் பான் எண் செயலற்று போகலாம்

உங்கள் பான் எண் செயலற்று போகலாம்

ஆக செயலற்ற பான் எண்ணை வைத்திருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்று தான். அதன் பின்பு மீண்டும் நீங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட பின்பு தான், உங்களது பான் எண் உயிர் பெறும். சரி ஆதார் பான் எண்ணுடன் எப்படி இணைப்பது, குறிப்பாக இணையம் மூலம் எப்படி இணைப்பது. எஸ் எம் எஸ் மூலம் எப்படி இணைக்கலாம், வாருங்கள் பார்க்கலாம்.

இணையம் மூலம் இணைக்கலாம்?

இணையம் மூலம் இணைக்கலாம்?

ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்

எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்

பான் எண்னை ஆதார் எண்ணுடன் மொபைல் எஸ்எம்எஸ் மூலமும் இணைக்கலாம். இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

ஆதார் மையத்திலும் இணைக்கலாம்

ஆதார் மையத்திலும் இணைக்கலாம்

ஒரு வேளை உங்களுக்கு ஆன்லைனிலோ அல்லது மொபைல் எண் மூலமாக இணைக்க தெரியாவிட்டால், நேரிடையாக ஆதார் மையத்திற்கு சென்று இணைக்கலாம். இதற்காக Annexure-I என்ற பார்மில் தேவையான விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இதே ஆன்லைனில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

aadhaar – pan linking deadline ends today. How to do link in online, SMS?

aadhaar – pan linking.. aadhaar – pan linking deadline ends today. How to do link in online, SMS?
Story first published: Wednesday, March 31, 2021, 15:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X