பான் கார்டு வைத்துள்ளீர்களா..? மத்திய அரசின் ஸ்டிரிக்ட் ஆர்டர்.. முதல்ல இதை செக் பண்ணுங்க..!

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இருந்தாலும் இன்னும் பலர் தங்களின் பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் பான் இணைப்பை செய்து முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண் என்பது நமது முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். குறிப்பாக நமது நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் நம்முடைய பான் எண்ணுடன் தான் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் கடந்த ஆண்டே இதனை இலவசமாக இணைப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.

பான் கார்டு வைத்துள்ளீர்களா..? மத்திய அரசின் ஸ்டிரிக்ட் ஆர்டர்.. முதல்ல இதை செக் பண்ணுங்க..!

தற்போது பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு அபராதம் செலுத்தி பான் எண்ணையும் ஆதாரையும் இணைக்கும் காலக்கெடு டிசம்பர் 31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை பான் எண்ணுடன் ஆதாரை எண்ணை இணைக்காதவர்கள் வரும் டிசம்பர் 31க்குள் அதனை இணைத்துவிட வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் அண்மை காலமாகவே நிதி சார்ந்த முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன . பல்வேறு ஃபின் டெக் நிறுவனங்களும் பான் எண் தகவல்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் ப்ரோபைல்களை கிரியேட் செய்வதாகவும், இது அந்த வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே நடப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் வருமானவரித்துறை இடம் பான் தகவல்களுக்கான அணுகலை கட்டுப்படுத்துமாறு உத்தரவிட்டது.


இந்த நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து பான் கார்டுகளோடும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலிழந்ததாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டால் நிதி ரீதியான பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் ஏற்படும். வருமான வரித்துறை அலுவலகம் வாயிலாகவே பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து விட முடியும்.

இதற்கு முதலில் வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படுத்தும் www.incometax.gov.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அடுத்ததாக homepageஇல் 'Quick Links' என்பதை கிளிக் செய்ய வேண்டும். Link Aadhaar status என்பதை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் கார்டு எண்களை பதிவிட வேண்டும்.

ஏற்கனவே உங்களின் பான் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால் Your PAN is already linked to given Aadhaar என்பது திரையில் காட்டும். அவ்வாறு இணைக்கப்படவில்லை எனில் "PAN not linked with Aadhaar” என காட்டும். அதில் 'Link Aadhaar' என்பதை கிளிக் செய்து, அபராதம் செலுத்தி ஆதாரையும் பான் எண்ணையும் இணைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+