சென்னை: வெறும் ரூ. 87 ரூபாய் முதலீட்டில் ரூ. 11 லட்சம் ரூபாய் பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. அப்படிப்பட்ட ஒரு வியக்கத்தக்க பாலிசியை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) நிறுவனம் வழங்கி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களைப் பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெறும் ரூ. 87 ரூபாய் முதலீட்டில் ரூ. 11 லட்சம் வரை சேமிக்க கூடிய ஆதார் ஷீலா பாலிசி என்ற திட்டத்தை பெண்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதிர்ச்சி காலத்தின் போது நீங்கள் செலுத்திய தொகையை வட்டியுடன் சேர்த்து பெற முடியும்.

எவ்வளவு தொகை டெபாசிட் செய்ய வேண்டும்?: ஆதார் ஷீலா திட்டத்தின் கீழ் இணையும் ஒவ்வொரு நபரும் தினமும் ரூ. 87 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச பாலிசி காலமாக 10 ஆண்டுகள் முதல் அதிகபட்ச பாலிசி காலமாக 20 ஆண்டுகள் வரை உள்ளது. இதில் நீங்கள் 15 வருட பாலிசி காலத்தை தேர்வு செய்தால், உங்களுக்கு காப்பீட்டு தொகையாக ரூ. 2 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை கிடைக்கலாம்.
இந்த திட்டத்தில் சேரும் ஒரு பெண் தினமும் ரூ. 87 ரூபாய் டெபாசிட் செய்து வருகிறார் என்றால் ஒரு வருடத்திற்கு ரூ. 31,755 டெபாசிட் செய்திருப்பார். அதன்படி தொடர்ச்சியாக குறைந்தபட்ச பாலிசி காலமாக பத்து ஆண்டுக்கு பாலிசி எடுத்திருந்தால் மொத்தமாக முதலீடு செய்த தொகை 3,17,550 ரூபாய் இருக்கும். இதனை உங்களுடைய 70ஆவது வயதில் எடுக்க விரும்பினால், நீங்கள் ரூ. 11 லட்சம் ரூபாய் பெற முடியும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?: ஆதார் ஷீலா பாலிசி திட்டத்திற்கு 8 வயது முதல் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்ச காலமாக 20 ஆண்டுகள் வரை உங்களால் சேமிக்க முடியும்.
ஆதார் ஷீலா பாலிசி திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்?: ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வருமான வரி அறிக்கை போன்றவை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும்.
பாலிசி எடுத்தவர், பாலிசிக் காலத்தின் போது இறந்து விட்டால், நாமினியாக அவர் யாரை தேர்ந்தெடுத்தாரோ.. அவருக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படும். முதிர்ச்சி தொகையுடன் கூடுதலாக லாயல்டி அடிசன் என்பதும் சேர்த்து நாமினிக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நிதி பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications