இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இலவச ஆதார் புதுப்பிப்புகளுக்கான காலக்கெடுவை டிசம்பர் 14-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம் தனிநபர்கள் தங்கள் ஆதார் விவரங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் அப்டேட் செய்து கொள்ளலாம். பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களில் பிழையிருப்பவர்கள் டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் இலவசமாக புதுப்பிக்க முடியும். உங்கள் வீட்டில் இருந்து இந்த செயல் முறையை எளிதாகச் செய்யலாம்.
ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பித்துக்கொள்ள UIDAI பரிந்துரைக்கிறது. அரசு மற்றும் தனியார் சேவைகளைப் பெறுவதில் எந்தவித இடையூறும் இருக்கக் கூடாது என்றால் அதற்கு உங்களுடைய ஆதார் விவரங்கள் அனைத்தும் துல்லியமானதாக இருக்க வேண்டும். எனவே காலக்கெடுவிற்கு முன்பு ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் போது இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

கண்டிப்பாக 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டுமா?: ஆதார் விவரங்களை 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பது என்பது கட்டாயம் கிடையாது. ஆனால் புதுப்பித்துக் கொள்வது எந்தவித சிக்கலும் இல்லாமல் அடையாள ஆவணங்களை பயன்படுத்த உதவும். சிலர் தங்களுடைய முகவரி விவரங்களை மாற்றி இருப்பார்கள். சிலர் மொபைல் நம்பரை மாற்றி இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் பிற்காலத்தில் எந்தவித பிரச்சனையும் இன்றி அரசாங்க சேவைகளை பெறுவதற்கு புதுப்பித்தல் முக்கியம்.
ஆதார் விவரங்களை புதுப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: உங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "மை ஆதார்" என்ற பிரிவின் கீழ் "அப்டேட் யுவர் ஆதார்" என்பதைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு "அப்டேட் ஆதார் டீடைல்ஸ்" ஆன்லைன் என்பதைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய ஆதார் நம்பர், கேப்சா குறியீடு போன்றவற்றை வழங்கி "ரெக்வெஸ்ட் ஒடிபி" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: OTP விபரங்களை வழங்கி தேவையான டாக்குமெண்ட்களை அப்லோட் செய்யவும். அப்டேட் செய்யப்பட்ட பிறகு URN நம்பர் வழங்கப்படும். இதை வைத்து புதுப்பித்தலின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
முன்பு ஜூன் 14-ஆம் தேதி வரை மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அதை மீண்டும் நீட்டித்து டிசம்பர் 14 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்கு பிறகும் நீங்கள் உங்கள் விவரங்களில் மாற்றம் செய்யலாம். ஆனால் அதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
புதுப்பித்தல் குறித்த போலியான செய்திகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது அவற்றை நம்ப வேண்டாம். இந்த புதுப்பித்தல் கண்டிப்பாக கட்டாயம் இல்லை. ஆனாலும் தேவைப்படுபவர்கள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள டிசம்பர் 14 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டியும் நீங்கள் அப்டேட் செய்யலாம். அதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications