இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து அறிவித்துள்ளது. புதிய காலக்கெடு டிசம்பர் 14, 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. UIDAI இந்தியக் குடிமக்களை 10 ஆண்டுகளுக்கு 1 முறை தங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க பரிந்துரைக்கிறது. நம் நாட்டில் மிக முக்கியமான முகவரி சான்றாக ஆதார் கார்டு உள்ளது. எனவே ஆதார் கார்டு தகவல்கள் அனைத்தும் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
UIDAI தனது அதிகாரப்பூர்வ X தளத்தில், "ஆதார் கார்டு வைத்திருப்பவர்களின் நலனுக்காக, இணையதளம் வழியாக இலவசமாக ஆவணங்களை பதிவேற்றும் வசதியை டிசம்பர் 14, 2024 வரை நீட்டித்துள்ளது. இந்த இலவச சேவையை "myaadhaar" வழியாகவே பெற முடியும்" என்று பதிவிட்டுள்ளது.

ஆதார் எண் என்பது தனித்துவமான அடையாள எண் ஆகும். ஒரு நபருக்கு ஒரே ஒரு ஆதார் கார்டு தான் நம் நாட்டில் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் நடந்து வருவதால் தான் உங்களுடைய ஆதார் கார்டை துல்லியமாக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைக்கிறது.
ஆதாரில் முகவரிச் சான்றினை எவ்வாறு பதிவேற்றுவது?: ஆவணங்களை ஆன்லைனில் myaadhar போர்ட்டலில் சமர்ப்பிக்கலாம் அல்லது ஏதேனும் ஆதார் மையத்தைப் பார்வையிடலாம். ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கு கீழ்க்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: உள்நுழைந்து விவரங்களைச் சரிபார்க்கவும். பெயர், பாலினம், பிறந்த தேதி &
முகவரி விவரங்களை சரிபார்க்கவும்.
ஸ்டெப் 3: முகவரியை மாற்ற வேண்டி இருந்தால் "Update address" என்பதை கிளிக் செய்து "Update Aadhaar Online"
ஸ்டெப் 4: முகவரிக்கான ஸ்கேன் செய்யப்பட்ட ஆதாரத்தை அப்லோட் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன்பின் SRN நம்பர் வழங்கப்படும். அதை வைத்து உங்கள் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்கலாம்.
சரிபார்ப்பு முடிந்ததும், உங்களுக்கு SMS அனுப்பப்படும்.

ஆதாரில் மொபைல் நம்பரைப் புதுப்பிப்பது எப்படி?: மொபைல் நம்பரைப் புதுப்பிக்க ஆவணங்கள் தேவையில்லை. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு ஆதார் வைத்திருப்பவர் இருக்க வேண்டும். மொபைல் நம்பரைப் புதுப்பிக்க கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
ஒரு குடியிருப்பாளர் ஆதாரிலிருந்து விலக முடியுமா?: UIDAI இணையதளத்தின்படி, ஒரு நபர் ஆதார் கார்டு பெற பதிவு செய்யாமல் இருக்கவும் விருப்பம் உள்ளது. ஆதார் கார்டு பிற சேவைகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட விஷயமாகும். அவற்றைப் பெற விரும்பவில்லை என்றால் அப்படியே இருக்கலாம். அதேபோல குழந்தைகள் 18 வயதை அடைந்த 6 மாதத்திற்கு பிறகு ஆதார் சட்டம் 2016-இன் கீழ் தங்களுடைய ஆதார் கார்டை ரத்து செய்ய விண்ணப்பம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications