இன்னும் 3 நாள் தான் இருக்கு.. அப்படி ஆதார் கார்டில் என்ன தான் மாத்தணும்? வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப்!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. எனவே உங்களுடைய ஆதார் கார்டு விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அவற்றை இலவசமாக செய்து கொள்ளலாம். தொடக்கத்தில் ஜூன் 14-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு அதன் பின் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது. எனவே இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த தேதிக்குப் பிறகு உங்கள் ஆதார் கார்டில் செய்யப்படும் புதுப்பிப்புகளுக்கு கட்டணத்தை வசூலிக்க உள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி காலக்கெடு முடிவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன.

தற்போது சோசியல் மீடியாவின் மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை மாற்ற வேண்டும் என்பன போன்ற வதந்திகள் பகிரப்பட்டு வருகிறது. அப்படி எதுவும் கிடையாது. 10 வருடங்களுக்கு ஒரு முறை உங்களுடைய தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அவற்றில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் UIDAI பரிந்துரைக்கிறது.

இன்னும் 3 நாள் தான் இருக்கு.. அப்படி ஆதார் கார்டில் என்ன தான் மாத்தணும்? வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப்!

மற்றபடி ஒருவருக்கு ஒரே ஒரு ஆதார் கார்டு மட்டுமே நம் நாட்டில் வழங்கப்படுகிறது. அந்த ஒருவருக்கு ஒரே ஒரு ஆதார் எண் மட்டுமே இருக்கும். எனவே யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேவையான விவரங்களை மட்டுமே திருத்தம் செய்து கொண்டால் போதுமானது.

செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு முன்பு ஆதார் விவரங்களை புதுப்பிப்பது ஏன் முக்கியம்?: 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆதார் கார்டை புதுப்பிக்காதவர்கள் தங்களுடைய முகவரி சார்ந்த விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு அரசாங்கத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது ஆனாலும் சரி.. அரசாங்க மானியங்களை பெறுவதானாலும் சரி.. உங்களுடைய முகவரி விவரங்கள் சரியானதாக இருக்கும். அது மட்டுமின்றி பிற விஷயங்களுக்காக ஆதார் கார்டு தேவைப்படும்போது பரக்க பரக்க சென்று உங்கள் விவரங்களை திருத்திக் கொள்வதற்கு பதிலாக அரசாங்கம் வழங்கும் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது அனைவருக்கும் நல்லது தானே.

இந்த புதுப்பை யாரெல்லாம் செய்ய வேண்டும்?: கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய விவரங்கள் மாறி இருக்கலாம். உதாரணமாக உங்களுடைய மொபைல் நம்பர் மாறி இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால் இன்னொரு வீட்டிற்கு மாறி இருப்பீர்கள். அப்போது அவர்களுடைய அட்ரஸ் மாறி இருக்கும். இதுபோன்ற நபர்களின் ஆதார் கார்டு விவரங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம். இதனால் தான் UIDAI 10 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்காமல் இருக்கும் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள பரிந்துரைக்கிறது.

கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. உங்கள் விவரங்களை ஆஃப்லைனில் புதுப்பிக்க விரும்பினால், UIDAI இணையதளத்தில் இருந்து ஆதார் பதிவுப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவில் சமர்ப்பிக்கவும்.

உங்கள் வருகையின் போது, ​​உங்கள் பயோமெட்ரிக் தகவல் சேகரிக்கப்படும், மேலும் உங்கள் புதுப்பிப்பின் நிலையைக் கண்காணிக்க, URN நம்பர் அடங்கிய ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

ஆதார் அங்கீகாரம் தேவைப்படும் சேவைகளை சிரமமின்றி பெறுவதற்கு புதிய காலக்கெடுவிற்கு முன் உங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+