இந்திய குடிமக்களுக்கான ஒரு தனித்துவ அடையாள ஆவணமாக ஆதார் அட்டைகள் இருக்கின்றன. அரசு சம்பந்தமான அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண் மிக முக்கியமான ஒரு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் நம்முடைய முகவரி சான்றாகவும் புகைப்பட சான்றாகவும் ஆதாரை பல இடங்களில் பயன்படுத்தி வருகிறோம்.
ஆதார் அட்டை: இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் எனப்படும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் போது குழந்தையின் பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் ஆகிய விவரங்கள் மட்டுமே பெறப்படும். குழந்தைகளின் கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படுவது கிடையாது.

மறந்துவிடும் பெற்றோர்: ஏனெனில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். எனவே குழந்தைக்கு 5 வயது முடிந்த உடன் பெற்றோர் கட்டாயம் அவர்களின் ஆதார் எண்ணுடன் பயோமெட்ரிக் விவரங்களை பதிவேற்றம் செய்துவிட வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் அதனை செய்ய மறந்துவிடுகின்றனர்.
பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்: குழந்தைக்கு 5 வயது முடிந்த உடன் அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்துக்கு சென்று அவர்களிடன் கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்து ஆதார் எண்ணில் பயோமெட்ரிக் தகவல்களை சேர்ப்பது கட்டாயமாகும். இந்நிலையில் 5 முதல் 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர், ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் இல்லை என்றால் ஆதார் ரத்தாகிவிடும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யூஐடிஏஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயோமெட்ரிக் அப்டேட் செய்யாவிட்டால் சிக்கல்: பெற்றோர் தங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ள பெற்றோர்களின் தொலைபேசி எண்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக எச்சரிக்கைகளை அனுப்பி வருகிறது. உங்கள் வீட்டில் ஐந்து முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகள் இருந்தால் உடனடியாக அவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களை சேர்த்துவிடுங்கள்.
7 வயது வரை இலவசம்: பொதுவாக இவ்வாறு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யும் போது குழந்தைகளின் புகைப்படமும் புதுப்பிக்கப்படும். 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வதற்கு எந்த கட்டணமும் செலுத்தப்பட வேண்டியது இல்லை , ஏழு வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . ஒருவேளை பெற்றோர் ஏழு வயதான பிறகும் தங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யாமல் வைத்திருந்தால் அந்த ஆதார் எண் செயலற்று போய்விடும் , மீண்டும் புதிதாக தான் உங்கள் குழந்தைக்கு ஆதார் எண் வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டி இருக்கும்.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications