இந்தியாவில், சட்டப்பூர்வ செயல்பாடுகளுக்கு சரியான ஆவணங்களை வைத்திருப்பது மிகவும் முக்கியம். இவற்றில், ஆதார் கார்டு தான் முதன்மை ஆவணம். நம் நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் ஆதார் கார்டை வைத்திருக்கின்றனர். ஆதார் கார்டுகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையில் அவ்வப்போது பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆதார் கார்டில் எந்த தவறுகள் இருந்தாலும் அதை ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம். ஆனால் சிலவற்றை ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது. அது என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
UIDAI பொதுவாக எந்தவித அப்டேட்டாக இருந்தாலும் சரி, அதற்கான ஆன்லைன் தளத்தை வழங்கியுள்ளது. எனவே பெயரில் உள்ள பிழைகள் பிறந்த தேதியில் இருக்கும் பிழைகள் ஆகியவற்றை சரி செய்து கொள்ளலாம். இதற்காக நேரில் அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் உங்கள் புகைப்படத்தை மாற்றி அப்டேட் செய்ய வேண்டுமானால்.. அதற்கு கண்டிப்பாக நீங்கள் அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு அத்தியாவசிய ஆவணமாகும். இது பல்வேறு சேவைகள் மற்றும் சட்ட நோக்கங்களுக்கான அடையாளச் சான்றாக செயல்படுகிறது. அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் தகவல்களைத் துல்லியமாக வைத்திருக்க வேண்டும்.
ஆதார் கார்டில் சில நேரங்களில் ஏதேனும் தவறுகள் இருக்கலாம். உதாரணமாக உங்கள் பெயர், முகவரி போன்ற விவரங்களில் தவறுகள் இருக்கலாம். இதனை நீங்கள் ஆன்லைனில் எளிதாக சரி செய்து கொள்ளலாம்.
பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை UIDAI-இன் அதிகாரப்பூர்வ போர்ட்டல் வழியாக அப்டேட் செய்யலாம். ஆனால் உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது. உங்கள் போட்டோவை அப்டேட் செய்ய வேண்டுமானால் அதற்கு ஆதார் சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
உங்கள் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை அப்டேட் செய்வதற்கு கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: புகைப்படத்தை மாற்ற முதலில் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதன்பின் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் அந்தப் புகைப்படத்தை உங்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்து விடுவார்கள்.
தற்போது பல்வேறு மோசடிகள் ஆதார் கார்டுடன் தொடர்புடையதாக இருப்பதால் நேரில் சென்று புகைப்படத்தை அப்டேட் செய்யும் போது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனால் தான் பிற விவரங்களைப் போல அல்லாமல் ஆதார் கார்டில் உள்ள போட்டோ மட்டும் ஆதார் சேவை மையங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.
உங்கள் ஆதார் கார்டு தகவலை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். பெரும்பாலான புதுப்பிப்புகளை ஆன்லைனில் செய்ய முடியும் என்றாலும், உங்கள் புகைப்படத்தைப் புதுப்பிக்க ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications