கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பெண்மணி ஜோசிமால் பி ஜோஸ். இவருக்கு கைவிரல்கள் இல்லாததால் ஆதார் எண் பெற முடியாமல் நீண்ட நாட்களாக தவித்து வந்தார். இந்த சூழ்நிலையில், ஜோஸ் விவகாரம் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அவர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டார். ஆதார் எண் பதிவுக்காக தகுதியான நபரின் கைரேகைகள் கிடைக்கவில்லை என்றால் அந்த நபரின் கருவிழியை ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து, ஆதார் குழு கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குமரகத்தில் உள்ள ஜோஸின் வீட்டுக்கு சென்று அவரது கருவிழியை ஸ்கேன் செய்து மற்ற விவரங்களையும் பதிவு செய்து ஆதார் எண் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அனைத்து ஆதார் சேவை மையங்களுக்கும் ஜோஸ் போன்ற அதாவது விரல்கள் இல்லாத ஊனமுற்ற நபர்களுக்கு ஆதார் வழங்க மாற்று பயோமெட்ரிக் பெறும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆதார் பதிவுக்கான 3 வழிகள்
இப்போது குடிமக்களுக்கு ஆதார் பதிவுக்கு 3 மாற்று வழிகள் உள்ளன.
1. கருவிழி ஸ்கேன் : தனிநபர்கள் இப்போது கருவிழி ஸ்கேன் அடிப்படையில் மட்டுமே ஆதார் பதிவு செய்யலாம்.
2.கைரேகை : கருவிழி சாத்தியமில்லை என்றால், ஆதார் பதிவுக்கு தனிநபர்கள் கைரேகைகளை மட்டும் பயன்படுத்தலாம்.
3.பயோமெட்ரிக் தேவையில்லை : கருவிழி ஸ்கேன் மற்றும் கைரேகை ஆகிய இரண்டையும் வழங்க முடியாதவர்களும் ஆதார் பதிவு செய்யலாம். இந்த போன்ற சந்தர்ப்பங்களில் அந்த நபர்கள் பின்வரும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பெயர்
இனம்
முகவரி
பிறந்த தேதி
பிறந்த ஆண்டு
மேலும், பயோமெட்ரிக் ஸ்கேன் இல்லாததை ஈடுசெய்ய, குறிப்பிட்ட முறையில் தனிநபரின் புகைப்படம் எடுக்கப்படும். இது ஒரு விரிவான அடையாள சரிபார்ப்பு நடவடிக்கையை உறுதி செய்கிறது. சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேர்க்கப்படுவதை ஊக்குவித்தல், தனித்துவமான சூழ்நிலைகள் உள்ள தனிநபர்களுக்கு ஆதார் அணுகலை செய்வதே புதிய விதிகளின் நோக்கமாகும்.
இலவச ஆதார் புதுப்பித்தலுக்கான காலக்கெடு
தனிநபர்கள் தங்களது ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி நாள் 2023 டிசம்பர் 14. இன்னும் 3 தினங்கள் மட்டுமே உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள். இதை myAadhaar வலைதளத்தில் செய்யலாம். இல்லையென்றால் ஆதார் மையங்களுக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு சேவை கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications