தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என போட்டி போட்டு கொண்டு அனைத்து தரப்பும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றன.வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் வேட்பு மனு தாக்கலை தீவிரப்படுத்தியுள்ளனர். வேட்பு மனு தாக்கலில் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் இடம்பெற்று மக்களின் தனி கவனம் பெற்றுள்ளன.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனு தாக்கலில் தன்னுடைய சொத்து விவரங்களை விஜய் வெளியிட்டுள்ளார். இதன்படி தனக்கு அசையும் சொத்துகள் 404.58 கோடி ரூபாய் இருப்பதாகவும், அசையா சொத்துகள் 220 கோடி ரூபாய் இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 734 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருப்பதாகவும் அவர் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு பல கோடி வரை கடன் தந்திருப்பதாகவும் தன்னுடைய பிரமாண பத்திரத்தில் விஜய் கூறியிருக்கிறார். தவெக வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக விஜய் இருக்கக்கூடிய நிலையில் அவருக்கு அடுத்ததாக அதிக சொத்து மதிப்பு கொண்ட நபராக ஆதவ் அர்ஜுனா திகழ்கிறார்.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா பண பலம் மிக்கவராக இருக்கிறார். தன்னுடைய வேட்புமனுவில் சொத்து விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் இதன்படி அவர் 2024-2026ஆம் நிதியாண்டில் 11.10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருப்பதாக கூறியுள்ளார். இதுவே 2020-21ஆம் நிதியாண்டில் 5.89 கோடியாக தான் இருந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தனக்கு 67.57 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். தன்னுடைய மனைவி டெய்ஸிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தனக்கு 180 கோடி ரூபாய் அளவிற்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தன்னுடைய மனைவியின் பெயரில் 162 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தனக்கு 17.49 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தன்னுடைய மனைவிக்கு 89 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துகள் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இது தவிர கையில் ரொக்கமாக 1.69 கோடி ரூபாய் பணம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் வங்கி மற்றும் முதலீடுகளில் 17. 53 கோடி இருப்பதாகவும் பங்குகளில் 2.23 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் 155 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார், சென்னையில் உத்தண்டி மற்றும் போர்ட் கிளப் பகுதிகளில் 17.49 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதாகவும், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு கார்கள் சொந்தமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒரு ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் 1.12 லட்சம் மதிப்பில் வைத்திருப்பதாகவும் 63 ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிள் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது தவிர மகாபலிபுரம், செங்கல்பட்டு ,கோயம்புத்தூர் ,கேரளா போன்ற நகரங்களிலும் தனக்கு சொந்தமாகவும் தன்னுடைய மனைவிக்கு சொந்தமாகவும் நிலங்கள் மற்றும் சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் கோயம்புத்தூரில் வணிகரீதியிலான 33.27 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், கட்டிடங்கள் தன்னுடைய மனைவியின் பெயரில் இருப்பதாக கூறியிருக்கிறார். தனக்கு சொந்தமாக 1.69 கிலோ தங்கம் இருப்பதாகவும் மனைவிக்கு சொந்தமாக 2.25 ஐந்து கிலோ தங்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா பிரபல லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன் ஆவார். கூடை பந்தாட்ட வீரரான இவர், தமிழ்நாடு கூடைபந்தாட்ட சங்கத்தின் பொது செயலாளராக இருந்தார். அரைஸ் கேபிடல் என்ற நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்த அவர், தேர்தல் வியூகங்களை வகுக்கும் நபராக இருந்தார். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த அவர், அதில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கட்சியில் முக்கிய நபராக உருவெடுத்தார்.


Click it and Unblock the Notifications