இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத போட்டி தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்தியில் உள்ளது. பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு உருவாக்குவதில், முதலீட்டை ஈர்ப்பதில் என அனைத்து விஷயத்திலும் 5 மாநிலங்களும் தொடர்ந்து போட்டிப்போட்டு வருகிறது.
அப்படி தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக பகுதியாகவும், பெங்களூருக்கு அருகில் இருக்கும் ஓசூரில் முதல்வர் ஸ்டாலின் பிரம்மாண்ட விமான நிலையம் அமைப்பதாக அறிவித்த நாளில் இருந்து கர்நாடக அரசு பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க துடியாய் துடித்து வருகிறது.

ஏற்கனவே ஓசூர் விமான நிலையம் அமைக்க இடம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் கர்நாடக அரசு தெற்கு பெங்களூரில் ஓசூர் விமான நிலையத்திற்கு போட்டியாக 2வது விமான நிலையத்தை அமைக்க 3 இடங்களை தேர்வு செய்திருந்தது. இந்த 3 இடத்திற்கும் தற்போது பிரச்சனை உருவாகியுள்ளதால் கர்நாடக அரசின் கனவு காலம் தாழ்த்தப்பட்டு உள்ளது, இது ஓசூர்-க்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), கர்நாடக அரசு பரிந்துரைத்த மூன்று இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில் 3 இடத்திலும் பெரிய பிரச்சனைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளது. 2025 ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில், கனகபுரா சாலை அருகே சுடஹள்ளி, சோமனஹள்ளி, குனிகல் சாலை அருகே நெலமங்கலா ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.

AAI நிபுணர் குழு, மூன்று இடங்களையும் ஆய்வு செய்தது. ஒவ்வொரு இடத்திலும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள், போக்குவரத்து இணைப்பு சவால்கள், செயல்பாட்டு சிரமங்கள் உள்ளன என்று கண்டறிந்தது. இந்த 3 இடங்களில் எந்த இடமும் சரியாக இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு தான், விமான நிலையம் அமைப்பதற்கு அவசியமான தரநிலைகளை சரிபார்க்கும் படியாகும். இக்கட்டத்திலேயே பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டு உள்ளதால் இது ஓசூர் விமான நிலையத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
கர்நாடகாவின் ஹெவி மற்றும் மீடியம் தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.பி. பாட்டில், AAI அறிக்கையை சாதாரண நடைமுறை என்று கூறியுள்ளார். ஒவ்வொரு இடத்தின் நன்மை தீமைகளை பரிசீலிக்கும் பகுதி இது என்று விளக்கினார். விரைவில் techno-economic and financial feasibility ஆய்வு தொடங்கும் என்று உறுதி அளித்தார்.


Click it and Unblock the Notifications