137 கோடிக்கு ஆடம்பர வீட்டை வாங்கிய ஆகாஷ் சவுத்ரி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆகாஷ் சவுத்ரி, டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் சுமார் 137 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார் என்று Zapkey.com நிறுவனம் ஆவணங்கள் சரிபார்த்து இத்தகவலை வெளியிட்டு உள்ளது.

 

ஆகாஷ் சவுத்ரி, சாங்க்யபுரியில் உள்ள கௌடில்ய மார்க் பகுதியில் டிப்ளமேடிக் என்கிளேவ் என்ற இடத்தில் ஒரு மாபெரும் பங்களாவை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆகாஷ் சவுத்ரி வாங்கிய சொத்து 1293.47 சதுர மீட்டர் ஆகும், மேலும் இந்தச் சொத்து ஆகஸ்ட் 1, 2022 அன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

PVR பாப்கார்ன் விலை ஏன் அதிகமாக உள்ளது.. அஜய் பிஜ்லி பதில் என்ன தெரியுமா..? PVR பாப்கார்ன் விலை ஏன் அதிகமாக உள்ளது.. அஜய் பிஜ்லி பதில் என்ன தெரியுமா..?

ஆகாஷ் சவுத்ரி

ஆகாஷ் சவுத்ரி

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் சவுத்ரி இந்த 1293.47 சதுர மீட்டர் கொண்ட பங்களாவை 137 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள நிலையில், சுமார் 8.2 கோடி ரூபாயை முத்திரைத்தாள் கட்டணமாகச் செலுத்தப்பட்டு உள்ளது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

பில்டர் அரவிந்த் சிங் மூலம் ஓரியண்டல் ஸ்ட்ரக்சர் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சுமித்ரா சக்ரவர்த்தி என்பவர் சொத்தை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் சவுத்ரி-க்கு விற்றுள்ளார்.

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்
 

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனர் ஜே.சி.சௌத்ரி கடந்த ஆண்டுத் தெற்கு டெல்லியின் வசந்த் விஹாரில் 2,000 சதுரடி கொண்ட பெரிய வீட்டை 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இதன் பின்னர்த் தெற்கு Bijwasan பகுதியில் 5 ஏக்கர் பண்ணை வீட்டை சுமார் ரூ.96 கோடிக்கு வாங்கினார்.

பைஜூஸ்

பைஜூஸ்

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்திற்கு ஏப்ரல் மாதத்தில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்-ஐ சுமார் 1 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்த பின்பு ஜே.சி.சௌத்ரி டெல்லி-யில் வீட்டை வாங்கினார்.

ராதாகிஷன் தமனி

ராதாகிஷன் தமனி

அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் (டிமார்ட்) நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராதாகிஷன் தமனி ஏப்ரல் மாதம் இந்தியாவில் விலை உயர்ந்த வீட்டை வாங்கினார். மும்பையின் மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு கடந்த ஆண்டு ஏப்ரலில் ₹1,001 கோடிக்கு வாங்கப்பட்டது.

தனிநபர் விற்பனை

தனிநபர் விற்பனை

90 ஆண்டுகள் பழமையான இந்த வீடு 5,752 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தான் இந்தியாவில் ஒரு தனிநபர் அதிகத் தொகை கொடுத்து வாங்கிய வீடாகும்.

ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி..! ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aakash Educational Services MD Aakash Chaudhry buys 137cr property in Delhi

Aakash Educational Services MD Aakash Chaudhry buys 137cr property in Delhi 137 கோடிக்கு ஆடம்பர வீட்டை வாங்கிய ஆகாஷ் சவுத்ரி..!
Story first published: Thursday, August 11, 2022, 20:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X