மும்பை: அமீர்கான் பிரபலமான பாலிவுட் நடிகர். இவரது நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக இன்றளவும் திகழ்கிறது. அமீர்கான் தனது கதாபாத்திரங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர்.
அமீர்கானுக்கு அண்மை காலமாக மும்பையில் குடியிருப்புகளை வாங்கி குவித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் கூட இவர் மும்பையில் 9.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தமாக குடியிருப்பை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸூம் எண்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் இவர் புதிய வீட்டினை வாங்கி இருக்கிறார். இதே பகுதியில் அமீர் கான் ஏற்கனவே பல்வேறு குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருக்கிறார்.
இது தொடர்பான பதிவுத்துறை ஆவணங்களின் அடிப்படையில் புதிய வீட்டின் மதிப்பானது 9.75 கோடி என தெரியவந்துள்ளது. மேலும் இதற்காக அமீர்கான் பதிவுக் கட்டணமாக 30,000 ரூபாயும் முத்திரை வரியாக 58 லட்சம் ரூபாயையும் செலுத்தியதாக தெரியவந்துள்ளது.
கடந்த 25 ஆம் தேதி இந்த பத்திரப்பதிவு நடைபெற்றதாக ஸூம் எண்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள பெலா விஸ்தா அப்பார்ட்மெண்டில் அமீர்கான் இந்த குடியிருப்பினை வாங்கி இருக்கிறார்.

இங்குள்ள 24 வீடுகளில் 9 வீடுகளை ஏற்கனவே அமீர்கான் சொந்தமாக வைத்திருக்கிறார். அதற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய மெரினா அப்பார்ட்மெண்ட்ஸிலும் அமீர்கான் சொந்தமாக குடியிருப்புகளை வாங்கியுள்ளார்.
இதே பகுதியில் தான் அமீர் கானின் முன்னாள் மனைவிகள் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோரும் வசிக்கிறார்களாம். தற்போது அமீர்கான் வாங்கி இருக்கக் கூடிய இந்த புதிய சொத்தின் அளவு 1027 சதுர அடி ஆகும். அமீர் கானை பொறுத்தவரை ஏற்கனவே மும்பை கார்ட்டர் சாலையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டையும், பன்ச் காலி பகுதியில் ஒரு பண்ணை இல்லத்தையும் சொந்தமாக வைத்திருக்கிறார். இவருக்கு உத்தர பிரதேச மாநிலத்திலும் சொத்துக்கள் இருக்கின்றன.
அமீர்கானை ஒரு திரைப்படத்தில் நடிக்கும் போது அதற்கான சம்பளம் மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் கிடைக்க கூடிய லாபத்திலும் ஒரு பகுதியை பெற்றுக் கொள்கிறார். அண்மையில் ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட தகவலின் படி அமீர்கானின் சொத்து மதிப்பு 1862 கோடி ஆகும்.
59 வயதாகும் அமீர்கான் இந்தியா மட்டுமல்ல சீனாவிலும் பெருமளவில் ரசிகர்களை பிடித்து வைத்திருக்கும் நடிகர் ஆவார். இவர் டைம் இதழின் 100நபர்கள் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications