தமிழ்நாட்டை சேர்ந்த வரும் அமெரிக்கா தொழில் உலகில் கால் பதித்து வெற்றிகரமான நபராக திகழ்ந்து வருபவருமான ஆர்த்தி ராமமூர்த்தி ஸ்கீமா (Schema) என்ற ஒரு முதலீட்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
ஸ்ரீராம் கிருஷ்ணா தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் தான் அவர் தன்னுடைய பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார். பின்னர் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் , யாகூ, பேஸ்புக், ஸ்னாப் சாட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் தொழில் முனைவோராகவும் மிகச் சிறந்த முதலீட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது அமெரிக்க அரசாங்கத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான பிரிவுக்கு தலைமை வகித்து வருகிறார். இவருடைய மனைவி தான் ஆர்த்தி ராமமூர்த்தி.

2020 ஆம் ஆண்டில் இருந்து தான் இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக தொடங்கினார். கிளப் ஹவுஸ் என்ற செயலியை ஸ்ரீராம் கிருஷ்ணனும் அவருடைய மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியும் தான் கொண்டு வந்தனர் . ஸ்டார்ட் அப்கள், கிரிப்டோ கரன்சிகள் குறித்து இவர்கள் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வுகளில் எலான் மஸ்க், மார்க் ஸக்கர்பெர்க் போன்ற உலகின் முன்னணி டெக் நிறுவனங்களின் தலைவர்கள் எல்லாம் பங்கேற்றுள்ளனர்.
எனவே இவர்களின் நேர்காணல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற தொடங்கின.பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் தலைமை செயல் அதிகாரிகளும் இவர்களின் நேர்காணல்களில் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் ஆர்த்தி ராமமூர்த்தியும் பிரபலமான ஒரு நபராக மாறினார். அவர் தற்போது ஸ்கீமா வென்ச்சர்ஸ் என்ற ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் 20 மில்லியன் டாலர்கள் நிதியோடு ஸ்கீமா நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். தொடக்க நிலையில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறிப்பாக முழுக்க முழுக்க இந்த துறைக்கே புதிதாக இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த முதலீட்டு நிறுவனம் செயல்படும் எனக் கூறியிருக்கிறார். எனக்கு ஸ்டார்ட் அப் என்பது மிகவும் புதிது நான் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வந்த பிறகு இரண்டு ஸ்டார்ட் அப்களை நிறுவினேன் என்னுடைய கதை இதுதான் எந்த ஒரு வழிகாட்டியும் இல்லாமல் நான் தொடங்கினேன் அதேபோல இந்த துறையில் இதுவரை எந்த அனுபவும் இல்லாதவர்களுக்கு உதவக்கூடிய நிறுவனமாகத் தான் ஸ்கீமா இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
தொழிற்சாலைகளுக்கு தேவையான மென்பொருள், ரோபோக்கள் மற்றும் டெவலப்பர் டூல்ஸ் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடக்க நிலையில் இருக்கக்கூடிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான முதலீடுகளையும் மற்றும் பிற உதவிகளையும் ஸ்கீமா வழங்கும் என தெரிவித்திருக்கிறார். ஆர்த்தி ராமமூர்த்தி இதற்கு முன்பு மைக்ரோசாப்ட் , நெட்பிளிக்ஸ் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர்.


Click it and Unblock the Notifications