TCS: இந்திய ஐடி துறையில் முதல் பெண் சிஓஓ.. யார் இந்த ஆர்த்தி சுப்ரமணியன்..?

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் புதிய தலைமை இயக்குநராக (COO) ஆர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS-இன் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிக செயல்பாடுகளை இவர் மேற்பார்வை செய்யவுள்ளார். இந்த நியமனம் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் தலைமைப் பதவிகளில் முன்னேறுவதற்கான முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.

ஐடி துறையில் பெண்கள் பல உயர்மட்ட பதவிகளில் இருந்தாலும், முதல் முறையாக சிஓஓ ஆக ஒரு பெண்ணை நியமித்த வரலாற்று பெருமை டிசிஎஸ்-க்கு மட்டுமே கிடைக்க உள்ளது. உயர்மட்ட பதவிகளில் பாலின சமத்துவ சமநிலை கடுமையாக இழந்துள்ள இந்த துறையில், ஆர்த்தி சுப்ரமணியன் முதல் பெண் தலைமை இயக்குநராக பொறுப்பேற்கிறார்கள் என்பது வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதேபோல் ஆர்த்தி சுப்ரமணியன் இந்த பதவிக்கு எளிதாக வந்துவிடவில்லை, பல வருட அனுபவம், திறன்களை கொண்டே இப்பதவிக்கு வந்துள்ளார். யார் இவர்..?

TCS: இந்திய ஐடி துறையில்  முதல் பெண் சிஓஓ.. யார் இந்த ஆர்த்தி சுப்ரமணியன்..?

ஆர்த்தி சுப்ரமணியன் 1989ஆம் ஆண்டு TCS-இல் பட்டதாரி பயிற்சியாளராக தனது பணியைத் தொடங்கினார், அதன் பிறகு பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்து, எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதிலே திறமைசாலி என்பதற்கான "Ms Fixit" என்ற பட்டத்தைப் பெற்றார். டெலிவரி சிறப்பு, கணக்கு மேலாண்மை மற்றும் பரந்த அளவிலான திட்டங்களை நிர்வகிக்கும் திறமை ஆகியவற்றில் தனது நிபுணத்துவம் காரணமாக அவர் நம்பிக்கைக்குரிய சிக்கலை சரிசெய்யும் நிபுணராக உருவாகினார்.

2014 இல் நிர்வாகம் மற்றும் அபாய மேலாண்மை பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார். அப்போது, TCS நிறுவனத்தில் மனிதவள (HR) மற்றும் சட்ட விதிகள், உள்புற கட்டுப்பாடுகளை மேற்பார்வையிட்டார். டெலிவரி பிரிவின் உலகளாவிய தலைவராக பணியாற்றும் முன், TCS-ன் சில்லறை விற்பனை மற்றும் நுகர்வோர் தொகுக்கப்பட்ட பொருட்கள் வணிக பிரிவில் ஏழு ஆண்டுகள் டெலிவரி தலைவராக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், பல முக்கியமான மூலோபாய கணக்குகளை அவர் மேற்பார்வை செய்தார். சென்னையில் SAP Centre of Excellence (சிஏபி திறன் மையம்) அமைக்கப்படுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும், வணிக சிறப்பு நோக்கில், பல வாடிக்கையாளர் சந்திப்புகளை முன்னணி நிர்வாகியாக முன்னெடுத்து, CTO அலுவலகத்துடன் சேர்ந்து பணியாற்றினார்.

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரியாக எட்டு ஆண்டுகள் பணியாற்றி, டிஜிட்டல் தொழில்நுட்பம், புதுமை மற்றும் AI ஆகியவற்றை இயக்கி வந்த டாடா சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்த்தி சுப்பிரமணியனை டிசிஎஸ் நிறுவனம் அழைத்து வந்து தனது நிர்வாக கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. AI வழிநடத்தும் உலகில், வாடிக்கையாளர்களுடன் தொடர்பும் பொருத்தமும் தவறாமல் தொடர, ஒரு சூழ்நிலை மறுசீரமைப்பை நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஆர்த்தி மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்," என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக டாடா குழுமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஆர்த்தி சுப்ரமணியன் மிகவும் திறமையான நிபுணர்" என்றும், டாடா குழுமத்தில் அவருக்கு பெரிய மரியாதை உண்டு என்றும் கூறினார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான சந்திரசேகரனின் நம்பிக்கைக்குரியவர் ஆர்த்தி சுப்ரமணியன். இருவரும் டிசிஎஸ்ஸிலும் பின்னர் டாடா சன்ஸ் நிறுவனத்திலும் ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர் என்றும் அந்த நபர் கூறினார்.

2017ஆம் ஆண்டு, ஆர்த்தி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது, TCS-இன் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து, நிறுவனத்தின் Non-Executive Directorஆக மாற்றப்பட்டார்.

டாடா நிறுவனங்களின் முதன்மை முதலீட்டு நிறுவனமான டாடா சன்ஸ், டாடா கேபிடல், டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ், இன்ஃபினிட்டி ரீடெய்ல் (குரோமா) மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் நிர்வாக குழுவிலும் பணியாற்றியுள்ளார். இந்தநிலையில், மே 1ஆம் தேதி முதல், ஆர்த்தி சுப்ரமணியன் TCS-இன் தலைமை இயக்குநராக பொறுப்பேற்கிறார். இவருக்கு வயது 58 ஆகும். இதன் மூலம், அவர் Non-Executive Director பதவியில் இருந்து, Executive Director பதவிக்கு முன்னேறுகிறார்.

இந்த புதிய பொறுப்பை ஏற்கும் நிலையில், அவர் டாடா கேபிடல், டாடா AIA லைஃப் இன்சூரன்ஸ், இன்ஃபினிட்டி ரீடெயில், மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டியுள்ளது. இதன் மூலம், TCS-இன் டெலிவரி திறன்களை மேம்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது.

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வணிக பிரிவுகளின் தலைவர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. அந்த வகையில், ஆர்த்தி சுப்ரமணியன் இவ்வாறு முக்கியமான தலைமைக் பொறுப்பை ஏற்கும் முன்னோடியான நிர்வாகியாக திகழ்கிறார். முன்னாள் சிஓஓ என் கணபதி சுப்பிரமணியம் நான்கு தசாப்தங்களாக நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர் கடந்த ஆண்டு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தப் பதவி காலியாக இருந்தது.

இந்திய IT சேவை நிறுவனங்கள் பாலின சமத்துவத்தைப் பற்றி உதட்டளவில் மட்டுமே கூறி வந்துள்ளன, உயர்மட்ட பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆர்த்தி அவர்களின் நியமனம் ஐடி துறையை சரியான திசையில் பயணிக்க வலியுறுத்தும் முக்கியமான முக்கியமான படி மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு பின்பற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாகும்.

TCS CEO கீர்த்திவாசன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆர்த்தி சுப்ரமணியன்-க்கு TCS-ஐ பற்றி நன்கு தெரியும். அவர் TCS நிறுவனத்தின் நிர்வாக குழுவின் ஒரு பகுதியாக இருந்தார், அதே நேரத்தில் டாடா குழுமத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். "அவர் வணிகம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது மற்றும் அது தொழில்நுட்பத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்பதில் விரிவான அனுபவத்தை கொண்டுள்ளார். இந்த COO பதவிக்காலம் அவர் 63 வயதை அடையும் 2030ம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

மேலும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் இயக்குனர்களுக்கான ஓய்வு கொள்கையை பின்பற்றி தற்போதைய CEO கீர்த்திவாசன் 2029 இல் ஓய்வு பெறவுள்ளார். இருப்பினும், 2030-இல் TCS நிறுவன வாரியம் என்ன முடிவு எடுக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. அதாவது ஆர்த்தி சுப்ரமணியனை நிர்வாக இயக்குனர் பதவிக்கு உயர்த்துவதா அல்லது புதியதாக ஒருவரை நியமிப்பதா என்பது குறித்து பின்னர் தெரியவரும். மேலும் ஆர்த்தி சுப்ரமணியன் Warangal-ல் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர், மேலும் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+