ஆரியமான் இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சொந்தமாக துவங்கி நிர்வாகம் செய்து வருகிறார். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் உடன் நெருங்கி பழகக்கூடியவர் ஆரியமான்.
27 வயதாக ஆரியமான் அமெரிக்காவில் யேல் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று, அமெரிக்காவில் பிரபலமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப்-ல் பணியாற்றி வந்தார். ஆனால் பணியை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். ஆரியமான இசை, உணவு மீது அதிகம் ஆர்வம் கொண்டு இருந்த காரணத்தால் Cymbal என்ற இசை திருவிழா-வையும், Pravaas என்ற கலாச்சார விழா-வையும் நடந்தினர்.

இவ்விரு நிகழ்ச்சி மூலம் இந்தியாவின் பெரும் தலைகள், பணக்காரர்கள் மத்தியில் ஆரியமான் பிரபலமானார். காரணம் Pravaas நிகழ்ச்சி நடந்த இடம் அவருடைய சொந்த வீடான Jai Vilas மாளிகையில், ஒருவரு்கு 75000 முதல் 200000 ரூபாய் வரையில் வசூலிக்கப்பட்டதால் பெரும் தலைகள் மட்டுமே கலந்துக்கொனண்டனர்.
Jai Vilas மாளிகை என்ற உடன் பலருக்கும் இவர் யார் என புரிந்திருக்கும், இவர் வேறு யாருமில்லை மத்திய சிவில் ஏவியேஷன் துறை அமைச்சரும், குவாலியர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியா -வின் மகன் யுவராஜ் மகானா ஆர்யமான் சிந்தியா.

ஆர்யமான் சிந்தியா தற்போது MyMandi என்னும் காய்கறி, பழங்களை ஹோல்சேல் விற்பனை செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை இயக்கி வருகிறார். MyMandi நிறுவனத்தின் சேவை ஜெய்பூர், நாக்பூர், குவாலியர், ஆக்ரா ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது. தற்போது MyMandi நிறுவனம் மாதம் 1 கோடி ரூபாய் வருவாய் பெற்று வருகிறது.
ஆர்யமான் சிந்தியா வசிக்கும் Jai Vilas மாளிகை 1,24,771 சதுரடியில் அமைந்துள்ளது, இந்த மாளிகை 1874 ஆம் ஆண்டு குவாலியர் மாகானத்தை ஆண்ட ஜெயஜிராவ் சிந்தியா கட்டினார். இந்த காலக்கட்டத்திலேயே சுமார் 1.1 கோடி ரூபாய் முதலீட்டில் 400 அறைகள் கொண்டு பிராம்மாண்டமாக கட்டப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 4000 கோடி ரூபாய்.



Click it and Unblock the Notifications