இந்திய அரசின் கட்டுப்பாட்டிலும், நீண்ட கால முதலீடு, முயற்சி மூலம் உலகம் போற்றும் பல்வேறு ஏவுகணை அமைப்புகளை உருவாக்கியுள்ள DRDO தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஒப்புதல் மூலம் DRDO நிறுவனம் உருவாக்கிய conventional missile systems அதாவது அணுஆயுதம், கெமிக்கல், பயோலஜிக்கல் போன்ற ஆபத்தான ஏவுகணை அல்லாத வெறும் வெடிப்பொருட்கள் மூலம் சேதம் ஏற்படுத்தக்கூடிய ஏவுகணைகளின் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இது இந்திய பாதுகாப்பு துறையில் நடத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றமாகும். இதற்கு முன்பு ஏல அடிப்படையில் சில தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் பகிர்ந்து DRDO கூட்டணியில் ஆயுதங்களும், ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய கதவு திறக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணையை விரைவாக தயாரிக்க கூடிய திறன் இந்திய பாதுகாப்பு துறைக்கு கிடைக்கும். மேலும் இந்த தொழில்நுட்ப பகிர்வு மூலம் இந்திய ராணுவத்திற்கு தேவையான மாற்றங்கள் உடனும் ஏவுகணை தயாரிக்கப்பட முடியும் என்பதால் கூடுதல் தொழில்நுட்ப முன்னேற்றமும் இந்த பாதுக்காப்பு துறையில் ஏற்படும்.
இந்த முக்கியமாக ஒப்புதல் அளித்த ராஜ்நாத் சிங் கூறுகையில் இத்தொழில்நுட்ப பகிர்வு மூலம் இத்துறையில் அதிகப்படியான நிறுவனங்களின் பங்கேற்பு இருக்கும், மேலும் இத்துறையில் உள்நாட்டு மதிப்பும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.
சமீபத்தில் இந்திய விண்வெளி துறை ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்தது மூலம் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் நடந்த நிலையில் தற்போது DRDO மூலம் இது ஆயுத உற்பத்தியிலும் நடக்க உள்ளது.
இதுநாள் வரையில் இத்துறையில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பல சிக்கல்கள் உற்பத்தியிலும், விரிவாக்கத்திலும் இருந்தது.
இதன் மூலம் DRDO தொழில்நுட்பத்தை பெறும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு தடாலடியாக உயர உள்ளது, ஏற்கனவே DRDO நிறுவனத்துடன் பல நிறுவனங்கள் இணைந்து பணியாற்றும் நிறுவனங்கள் இந்த ஒப்புதல் மூலம் பெரிய அளவில் பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications