சென்னை: இந்தியாவிலேயே மாநில அரசுகளுக்கு சொந்தமான பால் நிறுவனங்களில் ஆவின் நிறுவனம் மட்டும்தான் குறைந்த விலைக்கு பால் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்கிறது என பால்வளத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய பால்வளத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் அமுல், நந்தினி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுக்கு சொந்தமான பால் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பால் விலையுடன் ஒப்பிடும்போது 1 லிட்டருக்கு ஆவின் பாலின் விலையானது 6 ரூபாயில் இருந்து 16 ரூபாய் வரை குறைவாக இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவையில் பால்வளத் துறைக்கான கோரிக்கைகள் மீது பேசிய அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் ஆவினில் டோனுடு பால் ஒரு லிட்டர் விலை 40 ரூபாய் இதுவே நந்தினி நிறுவனம் 48 ரூபாய்க்கும், அமுல் நிறுவனம் 54 ரூபாய்க்கும் மில்மா நிறுவனம் 46 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றன என குறிப்பிட்டார். ஃபுல் க்ரீம் பாலின் விலை ஆவினில் ஒரு லிட்டர் 60 ரூபாய் இதுவே கார்டு வைத்திருப்பவர்களுக்கு 48 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார். நந்தினி நிறுவனம் ஃபுல் க்ரீம் பாலை ஒரு லிட்டர் 62 ரூபாய்க்கும் அமுல் நிறுவனம் 66 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றன என குறிப்பிட்டார்.
மேலும் மாநில முழுவதும் 18 இடங்களில் பால்வளத்துறை சம்பந்தப்பட்ட திட்டப்பணிகள் நடைபெற்ற வருவதாகவும் இதற்காக 1800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். சேலம் ,நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் பிற பகுதிகளில் செயல்பட்டு வரக்கூடிய பால் ஆலைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த திட்ட பணிகள் 2026 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே முடிவடையும் என்றும் நாட்டிலேயே முன்னணி பால் நிறுவனமாக ஆவினை நிலை நிறுத்துவது தான் அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
பால் கொள்முதலை ஊக்கப்படுத்துவதற்காக அரசு சார்பில் பால் விநியோகஸ்தர்களுக்கு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் என்ற வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் மட்டும் 4 லட்சம் விவசாயிகளுக்கு 324.14 கோடி பணம் இந்த ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஒரு ஆண்டுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் பொருட்கள் விற்பனை மூலம் 560 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் புதிதாக இனிப்புகள், பிஸ்கட்டுகள் மற்றும் ப்ரெட் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார், தற்போதைக்கு ஆவினுக்கு சொந்தமான சேலம், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருக்கும் ஆலைகளில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் , திருச்சியில் இருக்கும் ஆலையில் 60,000 லிட்டர்கள் ஐஸ் கிரீம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிக வரவேற்பு இருப்பதாகவும், சிங்கப்பூர் ,கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆவின் நிறுவனப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக தொடங்கப்படும் என தெரிவித்தார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications