இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனை (AB PM-JAY) சிறப்பான முறையில் செயல்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 29, 2024 அன்று தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு (Ayushman Vay Vandana Card), மூத்த குடிமக்களிடையே விரைவாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 3 வாரத்தில் சுமார் 10 லட்சம் பேர் இந்த கார்ட்-ஐ வாங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆயுஷ்மான் வய வந்தனா கார்டு அறிமுகம் செய்த 3 வாரத்தில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்து சிகிச்சைகளை சுமார் 4800 மூத்த குடிமக்கள் பெற்றுள்ளதாகவும், இதில் 1400 பேர் பெண்கள் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயுஷ்மான் வய வந்தனா கார்டின் முக்கிய நன்மைகள் என்ன? 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சுகாதார பாதுகாப்பை வழங்குகிறது. குறிப்பாக இதய அறுவை சிகிச்சை, இடுப்பு எலும்பு முறிவு/ மாற்று அறுவை சிகிச்சை, பித்தப்பை நீக்குதல், கண்புரை அறுவை சிகிச்சை, புரோஸ்டேட் சிகிச்சை மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு இலவசமாகச் சேவை அளிக்கப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனை (AB PM-JAY) திட்டத்தின் பலன்களை பெற ஆயுஷ்மான் வய வந்தனா கார்டுகள் முக்கிய கருவியாக உள்ளது. மேலும் இந்த கார்டை ஆன்லைன் வாயிலாகவே பதிவு செய்துகொள்ளவும் மத்திய அரசு இதற்காகப் பிரத்தியேக செயல்முறை அறிமுகம் செய்துள்ளது.
ஆயுஷ்மான் வய வந்தனா கார்டுக்கு விண்ணப்பிக்க, உங்களுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவை:
ஆதார் கார்டு
மொபைல் எண்
ஈமெயில் ஐடி
வயது ஆதாரம்
KYC விவரங்கள்
ஆயுஷ்மான் வய வந்தனா கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனை (AB PM-JAY) திட்டத்தின் பலன்களை பெற ஆயுஷ்மான் வய வந்தனா கார்டுகள் முக்கியம் என்பதால் பின்வரும் படிகளைப் பின்பற்றி NHA போர்ட்டல் மூலம் ஆன்லைனில் மூலம் இந்த கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்:
உள்நுழைவு: NHA போர்ட்டலுக்கு சென்று, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-யைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
விவரங்களை வழங்குதல்: உங்கள் மாநிலம், மாவட்டம், ஆதார் எண், PMJAY திட்டத்தின் பெயர், PMJAY ID அல்லது குடும்ப ID ஆகியவற்றை உள்ளிடவும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்: "ஆக்ஷன் " பட்டனை கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
KYC-யை நிறைவு செய்தல்: உங்கள் KYC செயல்முறையை நிறைவு செய்ய ஆதார் OTP-யைப் பயன்படுத்தி, சமீபத்திய புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
தனிப்பட்ட விவரங்களை வழங்குதல்: உங்கள் கிராமம், மாவட்டம், பின் குறியீடு, மொபைல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
ஆயுஷ்மான் வய வந்தனா கார்டின் நன்மைகளைப் பயன்படுத்துவதன் மூலம், மூத்த குடிமக்கள் நிதி சுமை இல்லாமல் தரமான சுகாதார சேவைகளைப் பெற முடியும், இதனால் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications