உலகின் முன்னணி பார்மாசியூட்டிக்கள் நிறுவனங்களில் இந்த அபாட் (Abbott) நிறுவனமும் ஒன்று.
தற்போது ஒட்டு மொத்த உலகத்தையும் தன் கோரப் பிடியால் ஆட்டுவித்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான சிகிச்சையில் சோதனை தான் முதல் & மிக முக்கியமான கட்டம். இதுவரை சுமாராக உலகத்தில் 6.15 லட்சம் பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. சுமார் 28,700 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள்.
அந்த சோதனையைச் செய்யும் ஒரு வித புதிய கிட்களை மேலே சொன்ன அபாட் (Abbott) நிறுவனம் கண்டு பிடித்து இருக்கிறதாம்.
45 நிமிடங்கள்
ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டு பிடிக்க சமீபத்தில் Cepheid என்கிற பயோ டெக்னாலஜி நிறுவனம் கண்டு பிடித்து இருக்கும் சோதனை முறையில் 45 நிமிடங்களில் கண்டு பிடிக்கலாம். அதற்கு லேப்கள் எல்லாம் தேவை இல்லை என சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.
5 நிமிடம்
தற்போது அமெரிக்காவின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான அபாட் லெபாரட்டரீஸ் (Abbott) நிறுவனம் கண்டு பிடித்து இருக்கும் கொரோனா வைரஸ் சோதனை கிட் மூலம் சுமாராக 5 நிமிடங்கள் முதல் 13 நிமிடங்களுக்குள் ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என சோதனை செய்து முடிவுகளைக் காண முடியுமாம்.
அனுமதி
தற்போது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (U.S. Food and Drug Administration) இந்த சோதனை கிட்களைப் பயன்படுத்த அவசர சிறப்பு அனுமதி (Emergency Use Authorization) கொடுத்து இருக்கிறார்களாம். ஏற்கனவே அமெரிக்காவில் கொரோனா தலை விரித்து ஆடிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எங்கு வேண்டுமானாலும்
இந்த அபாட் லெபாரட்டரீஸ் (Abbott) நிறுவனத்தின் சோதனை கிட்களை மருத்துவமனைகளில் மட்டும் இல்லாமல், எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன்படுத்த முடியுமாம். இந்த சோதனை கிட்களை, அதிகம் கொரோனா வைரஸ் பரவும் இடங்களில் களம் இறக்க, அபாட் நிறுவனம் அரசுடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications