வாழ்வில் பெரிய இலக்கை அடைய வேண்டுமெனில் சில முக்கியமான தியாகங்களை செய்தாக வேண்டிய கட்டாயம், அந்த வகையில் ஐஐடி பட்டதாரி ஒருவர் வெளிநாட்டில் 1.3 கோடி ரூபாய் சம்பளத்துடன் ஜாலியாகவும், சொகுசாகவும் வாழ்ந்து வந்த இளைஞன் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் காஃபி கடையை திறந்துள்ளார்.
1.3 கோடி ரூபாய் சம்பளத்தை விடவும் இந்த காஃபி கடை பிஸ்னஸ்-ல் அதிகப்படியான வருமானத்தை பெற முடியும் என்ற நம்பிக்கையில் வர்த்தகத்தை துவங்கி இன்று அசத்தி வருவது மட்டும் அல்லாமல் பெரிய பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், வென்சர் பண்ட் முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இந்த ஐஐடி பட்டதாரி. யார் இவர்..? இவருடைய காஃபி ஷாப் பெயர் என்ன..?

தற்போது மும்பையை அசத்தி வரும் abCoffee என்னும் காஃபி ஷாப் செயின் வர்த்தகத்தை உருவாக்கியவர் தான் அபிஜித் ஆனந்த். தனது கனவையும், ஆசைகளையும் நினைவாக்க அபிஜித் ஆனந்த் 1.3 கோடி சம்பளம் தரும் பணியை தூக்கியெறிந்துவிட்டு சொந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
அபிஜீத் ஆனந்த் தனது abCoffee பிரண்டின் முதல் கடையை மும்பையில் நிறுவினார், இந்தியாவின் காஃபி வர்த்தக துறையை மாற்றியமைத்து, அனைவருக்கும் சிறந்த காஃபி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் தனது நிறுவனத்தை உருவாக்கினார்.
abCoffee 2022 ஆம் ஆண்டில் தான் தனது வர்த்தக செயல்பாட்டை தொடங்கியது, தற்போது மும்பையில் சுமார் ஏழு இடங்களில் கடைகள் உள்ளது. விரைவில் டெல்லியில் தனது முதல் கடையை நிறுவ திட்டமிட்டுள்ளார் abCoffee நிறுவன தலைவர்.
அபிஜீத் ஆனந்த் ஐஐடி தன்பாத் முன்னாள் மாணவர் ஆவார், வெளிநாட்டில் பணிபுரியும் போது காபி விரும்பியாக மாறியதாகக் கூறும் அவர், வெளிநாட்டில் கிடைக்கும் காஃபி அனுபவத்தை போன்று இந்தியாவிற்கும் கொண்டு வர தான் விரும்பிய காரணத்தால் பெரும் சம்பளத்தை விடுத்து abCoffee-ஐ உருவாக்கியதாக தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த அபிஜீத் ஆனந்த், காபி தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு பெட்ரோலியத் துறையில் பணிபுரிந்தார். ருமேனியாவில் எண்ணெய் துறையில் பணிபுரிந்த அவருக்கு வருடம் 160,000 டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.3 கோடி ரூபாய் சம்பாதித்து வந்தேன், அங்கு நான் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தேன்.
அபிஜீத் ஆனந்த் மேற்கு வங்க தேசிய சட்ட அறிவியல் பல்கலைக்கழகத்தில் வணிகச் சட்டம் மற்றும் தொழில் முனைவோர் டிப்ளோமா பெற்றார். பின்னர் ரோம் பிசினஸ் ஸ்கூலில் அரசியல் மார்க்கெட்டிங் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து தன்பாத் ஐஐடியில் பெர்டோலியம் பொறியியல் பட்டம் பெற்றவர்.
2021-ல் இந்தியாவுக்கு வர முடிவு செய்தார் அபிஜீத் ஆனந்த். தான் விரும்பிய காஃபியை குடிக்க ஒரு மாதத்திற்கு 20000 ரூபாய் முதல் 25000 ரூபாய் செலவு செய்துள்ளார். இதுதான் சொந்தமாக ஒரு காஃபி பிராண்ட் மற்றும் ஷாப் உருவாக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஒரு கேப்பசினோ காஃபி 250 முதல் 300 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
அபிஜீத் ஆனந்த் abCoffee வெளிநாடுகளில் கிடைக்கும் அதே காஃபி தரத்தில் இந்திய மக்களுக்கு அளிக்க முடிவு செய்தார், இதற்காக கர்நாடக மாநிலத்தில் சிக்மங்களூரில் இருந்து காஃபி கொட்டைகளை பெற்று காஃபி பவுடர்களை தயாரிக்கிறார்.
அபிஜீத் ஆனந்த் துவங்கிய abCoffee தற்போது மும்பையில் இருக்கும் 7 கடைகள் வாயிலாக வெறும் 8 மாதத்தில் 28000 கப் காஃபிகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 1.8 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இதுவரையில் 2.4 கோடி ரூபாய் முதலீட்டை abCoffee ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications