பாலிவுட் பிரபலங்களும், முன்னணி தொழிலதிபர்களும் கடந்த ஒரு வருடமாக அதிகளவிலான பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றனர். பொதுவாக பெரும் பணக்காரர்கள் பங்குச்சந்தையிலும், ஆடம்பர பொருட்களில் அதிகம் முதலீடு செய்வது வழக்கம், ஆனால் தற்போது ரியல் எஸ்டேட் மோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருக்கும் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன், மும்பையின் போர்விலி பகுதியில் உள்ள ஓபராய் ஸ்கை சிட்டியில் ஆடம்பரமான ஆறு அப்பார்ட்மென்ட்-களை சுமார் ரூ.15.42 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓன்று, ரெண்டு அப்பார்ட்மென்ட் வாங்குவதை தாண்டி தற்போது பெரும் பணக்காரர்கள் கொத்துக் கொத்தாக வீடுகளை வாங்கி வருகின்றனர். அபிஷேக் பச்சன் வாங்கிய இந்த 6 ஆடம்பர வீடுகள் மொத்தம் 4,894 சதுர அடி பரப்பளவு கொண்டது.
மேலும் ஒரு சதுர அடி ரூ.31,498 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மே 5, 2024 அன்று விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக Zapkey நிறுவனம் தகவல் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
1,101 சதுர அடி கார்பெட் பரப்பளவு கொண்ட முதல் அப்பார்ட்மென்ட் ரூ.3.42 கோடிக்கும், தலா 252 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது அப்பார்ட்மென்ட் தலா ரூ.79 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 1,101 சதுர அடி மற்றும் 1,094 சதுர அடி கார்பெட் ஏரியா கொண்ட நான்காவது மற்றும் ஐந்தாவது அப்பார்ட்மென்ட் முறையே ரூ.3.52 கோடி மற்றும் ரூ.3.39 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆறாவது அடுக்குமாடி குடியிருப்பும் ரூ.3.39 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
போர்விலி கிழக்கில் அமைந்துள்ள 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒருங்கிணைந்த குடியிருப்பு அப்பார்ட்மென்ட் திட்டம் தான் இந்த ஓபராய் ஸ்கை சிட்டி. இதில் எட்டு ஆடம்பரமான குடியிருப்பு டவர்கள் மற்றும் 15 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட ஸ்கை சிட்டி மால் ஆகியவை அடங்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications