ஆந்திர பிரதேச மாநிலம் ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் ரெட்டி.கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியரான அபிஷேக் ரெட்டி ஹைதராபாத்தில் சொந்தமாக ஒரு வெப் டிசைனிங் கம்பெனியைத் தொடங்கினார்.
நிறைய கம்பெனிகளுக்கு புதுமையான டிசைன்களை வழங்கினார். அதில் மகிழ்ச்சியடைந்த ஒரு நிறுவனம் அவருக்கு ஆண்டுக்கு 1.50 கோடி சம்பளத்தில் வேலை தந்தது. இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அபிஷேக் ரெட்டி கடுமையாக உழைத்தார்.

தினமும் 15 மணிநேரம் கடின உழைப்பு. வார இறுதிகளில் கூட விடுப்பு எடுப்பதில்லை. ஆனால் நினைத்தால் வார நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் விடுமுறை எடுத்துக் கொள்வார். அவரது சொந்த கம்பெனியை விருப்பத்துடனேயே நடத்தி வந்தார். பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அபிஷேக் ரெட்டி வெப் டிசைனிங்கை கற்றுக் கொண்டார். 12 ஆம் வகுப்பை முடிக்கும்போது அவருக்கு சில ஃப்ரீலான்ஸர் வேலைகள் வந்தன.
பள்ளிக் கல்வி முடிந்ததும் கல்லூரிக்குச் செல்லாமல் ப்ரீலான்ஸர் வேலைகளை செய்ய நினைத்தார். இருந்தாலும் கல்லூரியில் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சொந்த கம்பெனியை ஆரம்பித்து தொழில் செய்தார். அவரது வாடிக்கையாளர் நிறுவனம் தந்த ரூ.1.50 கோடி சம்பள வேலையையும் ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவருக்கு வயது 22. இரண்டாண்டுகள் கடின உழைப்புக்குப் பின்னர்
அவரது சாப்ட்வேர் வேலையில் அபிஷேக் ரெட்டிக்கு அலுப்பு ஏற்பட்டுவிட்டது.
விவசாயத்தில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.
எனவே வேலையை விட்டுவிட்டு சேர்த்து வைத்த பணத்தை வைத்து ஓபுளாபுரத்தில் ஒரு விவசாயப் பண்ணையை விலைக்கு வாங்கினார். அதில் தனது தாயாருடன் சேர்ந்து இப்போது விவசாயம் செய்து வருகிறார்.
நான் 70 வயது வரை வாழுவேன். அதில் பாதி நாட்கள் எனது மீதி நாட்களுக்காக சேமிப்பேன் என்கிறார் அபிஷேக் ரெட்டி. அவரது தாயார் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் பண்ணையில் உதவிகளை செய்து வருகிறார்.
அபிஷேக் ரெட்டி தனது விவசாயத் தொழில் பற்றி சில்லி சென்செய் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அங்கு அவருக்கு 1.2 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
இப்போது பண்ணையில் விளையும் பொருட்களை விற்று பணமாக்குகிறோம். ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானத்தை எதிர்பார்க்கிறோம் என்று அபிஷேக் ரெட்டி கூறினார்.
அவரது தங்கை ஐஸ்வர்யா ஐஐடி கரக்பூரில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு அவரும் அபிஷேக் ரெட்டியின் பண்ணையில் சேர்ந்து வேலை பார்க்கிறார். எனது தொழிலை சிறப்பாகச் செய்து நல்ல வருமானத்தைப் பெறுவதற்காக எனது சகோதரி உதவுகிறார் என்றார் அபிஷேக் ரெட்டி.
Story written by: Jayachandran
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications