கடந்த சில வாரங்களாகவே மக்களை கொரோனா வாட்டி வதைத்து நிலையில், கூட ஒரு நல்ல விஷயமும் நடந்தது என கூறலாம்.
அது கொரோனாவின் காரணமாக பல நிறுவனங்கள், தொழில்சாலைகள் சீனாவில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், அவற்றில் சுமார் 1,000 நிறுவனங்கள் இந்தியா வரலாம் எனவும் கூறப்பட்டது.
இன்னும் கூறப்போனால் அவற்றில் குறைந்தபட்சம் 300 நிறுவனங்களாவது இந்தியாவில் தங்களது ஆலைகளை அமைக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பெருகும், இந்தியாவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவுகளை ஒரளவுக்காவது மீட்டெடுக்க முடியும் என்றும் மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
பெரும் பயனில்லை
இதற்காக பல மாநிலங்கள் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் அவ்வாறு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களால், இந்தியா பயனடையும் என்பதை உறுதியாக கூற முடியாது என நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது உண்மையல்ல
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்காலி செய்தி சேனலில் பேசிய அபிஜித் பானர்ஜி, கொரோனா பரவ, சீனா தான் காரணம் என்கின்றனர். அதனால், சீனாவில் இருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தங்களது வர்த்தகத்தினை தொடங்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இதனால் இந்தியா வளர்ச்சி பெறும் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை.
விலை குறைந்த பொருட்களை வாங்க யாராவது மறுப்பார்களா?
மேலும் சீனா அதன் யுவான் கரன்சி மதிப்பை குறைத்தால் என்னவாகும். சீனாவில் பொருட்களின் விலை குறையும். ஆக விலை குறைந்த பொருட்களை வாங்க யாராவது மறுப்பார்களா? ஆக சீனாவின் பொருட்களையே வாங்க மக்கள் ஆர்வம் காட்டலாம். இதனால் சீனாவிற்கே பயன். ஆக இதனால் இது இந்தியாவுக்கு எந்தளவுக்கு பயன் அளிக்கும் என்று தெரியவில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஊக்குவிப்பு சலுகை
இதே ஜிடிபி பற்றிய பானர்ஜி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அவர்களது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக அளித்துள்ளனர். ஆனால், இந்தியாவே குறைவான ஊக்கச் சலுகைகளையே அறிவித்துள்ளது என்று கூறியுள்ளார்.
மக்கள் கையில் பணம் இல்லை
மேலும் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. ஏழை மக்களிடம் போதுமான பணம் கையில் இல்லை. ஆனால் அங்கு தேவை அதிகமாகவே உள்ளது. ஆக அரசு, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு, மக்களின் கைகளில் பணம் வழங்க வேண்டும். இதனால் செலவினங்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரம் மேம்படும்.
அரசின் பொறுப்பு
சாதாரண மக்கள் தான், நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துகின்றனர்; பெரும் பணக்காரர்கள் அல்ல. வெளி மாநில தொழிலாளர்கள், பல மாநிலங்களை கடந்து அவர்களது சொந்த ஊர்களூக்கு செல்கின்றனர். அதனால் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் அளித்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது என்றும் பானர்ஜி கூறியுள்ளார்.
பொருளாதாரத்தினை எப்படி மேம்படுத்துவது?
அதோடு சமூக இடைவெளியுடன் பொருளாதாரத்தினை எப்படி மீட்டெடுப்பது என்பது பற்றிய நிலை இன்னும் எட்டபடவில்லை. மேலும் லாக்டவுன் கூறிய பானர்ஜி, ஆரம்பத்தில் இருந்தே பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் எவ்வளவு தொற்று உள்ளது என்பது சரியாக தெரியவில்லை. ஏனெனில் இன்னும் பெரும்பாலனோருக்கு பரிசோதனையே செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications