ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் 20% பங்குகளை ரூ.11,000 கோடி மதிப்பில் சுமார் 2,200 கோடி ரூபாய்க்கு அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி (ADIA) வாங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மலிவு விலையில் வீட்டு வசதி நிதிப் பிரிவில் தனியார் பங்கு முதலீட்டாளரால் செய்யப்படும் மிகப்பெரிய பங்கு முதலீடாகும்.
ஐஐஎப்எல் பைனான்ஸ்
ஐஐஎப்எல் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் இந்த ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ், இந்தியாவில் வட்டி விகித உயர்வால் ரியல் எஸ்டேட் வர்த்தகம் சரியும் என சந்தை கணிப்புகள் கூறுகையில் வளர்ந்து வரும் வீட்டுக் கடன் வர்த்தக தேவையைப் பூர்த்தி செய்யவும், புதிய சந்தைகளுள் நிழையவும் கூடுதல் மூலதனத்தைப் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ.52,000 கோடி கடன் வர்த்தகம்
ஐஐஎப்எல் பைனான்ஸ் சுமார் 52,000 கோடி ரூபாய் அளவிலான கடன் வர்த்தகம் மற்றும் 12,500 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்டு உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பையும் அதிகரிக்க முடியும்.
ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ்
இதேவேளையில் ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் 24,000 கோடி ரூபாய் அளவிலான கடன் வர்த்தகத்தையும், 11,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் தான் 20% பங்குகளை சுமார் 2,200 கோடி ரூபாய்க்கு அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி (ADIA) வாங்க முடிவு செய்துள்ளது.
7.57 சதவீதம் உயர்வு
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஐஐஎப்எல் பைனான்ஸ் பங்குகளின் விலை 7.57 சதவீதம் அதிகரித்து 353.90 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் போது, ஐஐஎப்எல் குழுமத்தின் தலைவர் நிர்மல் ஜெயின், வளர்ந்து வரும் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதில் ADIA நீண்ட கால அர்ப்பணிப்பு மற்றும் வளமான அனுபவத்தை அளிக்கிறது.
230 கிளைகள்
IIFL Home Finance நிறுவனம் இந்தியாவில் 230 கிளைகளுடன் 168,000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சிறிய அளவிலான வீட்டுக் கடன்களையும், சொத்துக்கு எதிரான கடன்கள் மற்றும் கட்டுமான நிதி ஆகியவற்றை வழங்குகிறது.
பசுமைக் கட்டிடங்கள்
கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கும் செலவு குறைந்த கட்டமைப்புகளை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்ட Kutumb தளத்தின் மூலம் வீட்டு மேம்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து மலிவு விலையில் பசுமைக் கட்டிடங்கள் கட்டுவதையும் இது ஊக்குவிக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications