இந்தியாவின் பெரும் தொழிலதிபரான கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமம் 2023 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியானதில் இருந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டது.
இப்படியிருக்கையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பெயரில் செபி துவங்கிய விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் வேளையில், இதில் முக்கியம் விஷயங்கள் இருப்பதாகக் கூறப்படும் வேளையில் கௌதம் அதானி-க்கு முக்கியமான பிரச்சனை வந்துள்ளது.

அதானி குழும நிறுவனங்களான அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகியவற்றில் தனது முதலீட்டை விற்க திட்டமிட்டுள்ளதாக அபுதாபி நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கோ நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அதானி நிறுவன பங்குகளை விற்க முக்கியமான காரணமாக, இன்டர்நேஷனல் ஹோல்டிங் கோ நிறுவனம் தனது ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ மூலோபாயத்தை மறுசீரமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் காரணத்தால் இதன் ஒரு பகுதியாக விற்கப்பட உள்ளது என IHC தெரிவித்துள்ளது.
இன்டர்நேஷனல் ஹோல்டிங் கோ நிறுவனத்தின் துணை நிறுவனங்களான கிரீன் எனர்ஜி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் ஆர்எஸ்சி மற்றும் க்ரீன் டிரான்ஸ்மிஷன் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் ஆர்எஸ்சி ஆகியவை ஏற்கனவே தங்கள் பங்குகளை விற்க புதிய பையர் அதாவது வாங்குபவரைத் தேர்வு செய்து இதற்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜூன் மாத இறுதியில் வெளியான தகவல் படி அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் IHC நிறுவனத்தின் கிரீன் டிரான்ஸ்மிஷன் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் 1,56,82,600 பங்குகள் இது மொத்த பங்குகளில் சுமார் 1.4% பங்குகளாகும். இதேபோல் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் கிரீன் எனர்ஜி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் 2,00,18,198 பங்குகள் இது மொத்த பங்குகளில் சுமார் 1.3% பங்குகளாகும்.
இதை IHC நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் சுமார் 2 பில்லியன் டாலர் தொகையை அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவற்றில் முதலீடு செய்தது. தற்போது அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் IHC மற்றொரு நிறுவனத்திற்கு விற்கப்படும் வேளையில் பொதுச் சந்தைக்கு வராது.
ஆனால் நாளை வர்த்தகத்தில் தானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் முதலீட்டாளர்களின் முக்கியக் கவனத்தைப் பெற உள்ளது. இன்று 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை முதலீட்டை இழந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நாளையும் விஷ பரிச்சையாகவே இருக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications