அபுதாபி: பல்வேறு நாட்டுகளின் அரசுகளின் சொந்தமாக நிதிகளை உருவாக்கி அவற்றை பங்குகள், பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுகின்றன. அந்த வகையில் அரசு நடத்தும் முதலீட்டு நிதிகளின் அடிப்படையில் உலகிலேயே பணக்கார நகரம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது அபுதாபி.
அபுதாபி அரசு நிர்வகிக்கும் முதலீட்டு நிதிகளின் மதிப்பு அடிப்படையில் இந்த நகரம் உலகிலேயே பணக்கார நகரமாகி இருக்கிறது. குளோபல் எஸ்டபுள்யூஎஃப் Global SWF (Sovereign Wealth Funds) சார்பாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் நடப்பு மாத நிலவரப்படி அபுதாபி அரசு 1.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டு நிதிகளோடு உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது. Sovereign Wealth Fund என்பது அரசாங்கங்கள் நடத்தக்கூடிய முதலீட்டு நதிகளாகும்.

இவை பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் பத்திரங்கள் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்து செல்வத்தை உருவாக்கும். இந்த பணமானது அரசாங்க செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும் தொழில்கள் மற்றும் பொருளாதாரங்களில் முதலீடு செய்ய செய்யப்படும்.
அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு முதலீட்டு நிதி கொண்ட ஒரு நகரம் அபுதாபி ஆகும். அபுதாபி அரசனை பொருத்தவரை எமிரேட்ஸ் முதலீட்டு ஆணைய நிதி, அபுதாபி முதலீட்டு ஆணைய நிதி என்பன உள்ளிட்ட பல்வேறு நிதிகள் மூலம் கணிசமான அளவு வருமானத்தை பெறுகிறது.
இதில் அபுதாபியின் ராயல் பிரைவேட் ஆபீஸ் நிதி 344 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதனை சேர்க்காமலேயே மொத்தமாக அபுதாபி அரசு நடத்தி வரும் நிதிகளின் மதிப்பு 1.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.
அரசின் முதலீட்டு நிதிகள் கொண்ட நகரங்களில் முதல் இடத்தில் இருக்கும் அபுதாபி இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் சர்வதேச அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது இந்த நிதியங்களில் மொத்தம் 3,137 ஊழியர்களை அபுதாபி அரசு பணிக்கு அமர்த்தியுள்ளது.
இங்கே இயங்கும் முதலீட்டு நிறுவனங்களின் போர்ட் போலியோ மற்றும் இந்த நகரத்திற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு ஆகியவையே வளர்ச்சிக்கு காரணம் என சொல்லப்படுகிறது. 1950 களில் இருந்தே சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளராக அபுதாபி நகரம் இயங்கி வருகிறது. அபிராமி அரசாங்கத்தை பொருத்தவரை எப்பொழுது எண்ணெய் , எரிவாய் வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கியதோ அப்போதே அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு நிதிகளையும் தொடங்கி விட்டது.
முதலில் அபுதாபி அரசு தொடங்கிய நிதிதான் அபுதாபி முதலீட்டு ஆணைய நிதி ஆகும். இந்த நிதிகள் சர்வதேச சந்தைகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுகின்றன. அரசு முதலீட்டு நிதிகளின் அடிப்படையில் பணக்கார நகரங்கள் பட்டியலில் ஓஸ்லோ, சிங்கப்பூர், ரியாத், ஹாங்காங் துபாய் ஆகிய நகரங்களும் இடம்பிடித்துள்ளன.
Written by: Devika


Click it and Unblock the Notifications