ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆரம்பித்த சில வருடங்களிலேயே தனக்கென ஒரு தனி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதன் காரணமாகவோ என்னவோ? இந்த நிறுவனத்தில் அடுத்தடுத்த முதலீடுகள் குவிந்து வருகின்றன.
அதிலும் ஒரு மாதத்திற்குள் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீட்டினை திரட்டியுள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், தற்போது மத்திய கிழக்கு பகுதியில் மூன்று முக்கிய முதலீடுகளை ஈர்க்ககூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்த முதலீட்டு திட்டங்கள் குறித்து தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முதலீட்டுக்காக பேச்சு வார்த்தை
அபுதாபியின் முபதாலா முதலீட்டு நிதி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இயங்குதளங்களில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆக இந்த நிறுவனம் விரைவில் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அபுதாபியின் முபதாலா முதலீட்டு நிறுவனம், அபுதாபியின் முதலீட்டு ஆணையம், சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதி ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வளவு முதலீடு?
மேலும் இந்த முபதாலா முதலீட்டு நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவின் நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த முதலீட்டாளர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றிற்கு சேவை செய்வதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.
மொத்த முதலீடுகள்
ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.78,562 கோடி முதலீட்டை செய்துள்ள நிலையில், மேற்கொண்டு செய்யப்படும் இந்த முதலீடுகள், இன்னும் ஜியோ நிறுவனத்தினை மேம்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் முதலீடு
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக், 5,655.75 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இதனையடுத்து, சில்வர் லேக் வசம், ஜியோ பிளாட்பார்மின், 1.15 சதவீத பங்குகள் வரும். இதே பேஸ்புக் நிறுவனம், ஜியோவின், 9.99 சதவீத பங்குகளை, 43,574 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இது தவிர விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக் உள்ளிட்ட நிறுவனங்களும் கணிசமான அளவு முதலீடினை செய்ய உள்ளன.
எப்போது முதலீடு?
அதுமட்டும் அல்ல, முன்னணி உலகளாவிய முதலீட்டு நிறுவனமான கேகேஆர் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்த நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 11,367 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகவும் கடந்த மாதம் அறிவித்தது. அடுத்த மார்ச் 2021க்குள் இந்த நிறுவனத்தினை கடன் இல்லா நிறுவனமாக மாற்ற இலக்கு வைத்துள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளது நினைவு கூறத்தக்கது.
சர்வதேச அளவிலான ஐபிஓ திட்டம்
அதுமட்டும் அல்ல அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள் ஜியோ நிறுவனம், சர்வதேச அளவிலான ஐபிஓவை எதிர்வரும் மாதங்களில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முழு உரிமையாளராகும். ஜியோ நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வயர்லெஸ் கேரியர் நிறுவனமாகும். இது கடந்த ஜனவரி 2020ல் 376.67 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications