ஹூண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பின்பு கௌதம் அதானி தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்தும், சில முக்கிய நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்யவும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதானி பவர் நிறுவனத்தின் 8.1 சதவீத பங்குகளை GQG, கோல்டுமேன் சாச்சஸ் போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்த நிலையில், இன்று அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது.

அபுதாபி நாட்டின் பங்குச்சந்தையில் இருக்கும் 2வது பெரிய நிறுவனமான TAQA எனப்படும் Abu Dhabi National Energy Co. PJSC உலகின் 11 நாடுகளில் எனர்ஜி மற்றும் தண்ணீர் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வருகிறது. TAQA தற்போது இந்தியாவில் தனது முதலீட்டை 2 மடங்கு அதிகரிக்க முடிவு செய்து அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மதிப்பீடு செய்யும் பணிகளை செய்து வருகிறது.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பவர் டிரான்ஸ்மிஷன், கிளீன் எனர்ஜி, கிரீன் ஹைட்ரஜென் ஆகிய துறையில் இயங்கி வருகிறது. இந்த மதிப்பீடும், முதலீட்டு சூழ்நிலையும் சரியாக இருந்தால் TAQA, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் சுமார் 1.5 முதல் 2.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் TAQA - அதானி டிரான்ஸ்மிஷன் கூட்டணி மூலம் வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய பகுதியில் இணைந்து செயல்பட உள்ளது. மேலும் இந்த முதலீட்டு வாயிலாக அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் சுமார் 19.9 சதவீத பங்குகளை TAQA கைப்பற்றும், தற்போது 91,660 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிறுவனத்தில் அதானி ப்ரோமோட்டார்கள் சுமார் 68.28 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
தற்போதைய மதிப்பீட்டில் வியழக்கிழமை வர்த்தக முடிவில் 20 சதவீத அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகளை TAQA கைப்பற்றினால் மொத்தம் 2.19 பில்லியன் டாலர் அல்லது ரூபாய் மதிப்பில் 18,240 கோடி ரூபாய் முதலீடு செய்யும்.


Click it and Unblock the Notifications